6 சிக்சர்ஸ்.. 24 மணி நேரத்தில் மோடி நிகழ்த்தும் மேஜிக்! தமிழ்நாடு விசிட்டில் இதுதான் நடக்குமாம்! ஆஹா
சென்னை: சென்னையில் பிரதமர் மோடி பல்வேறு முக்கியமான திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். கோவையில் இருந்து சென்னைக்கு வரும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ளார்.
அதன்பின் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் கலந்து கொள்கிறார். அதேபோல் ரூ.1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை திறந்து வைக்கவும் பிரதமர் மோடி செல்ல இருக்கிறார்.

சென்னையில் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார். அவர் 6 முக்கியமான திட்டங்களை சென்னையில் இருந்து துவங்கி வைக்க உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இருக்கும் ஒருங்கிணைந்த புதிய டெர்மினல் 1 ஐ பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையம் கட்டுமானத்திற்கு பின் நாள் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. சென்னைக்கு வரும் பயணிகள் எண்ணிக்கையை 23 மில்லியன் பயணிகள் என்ற அளவில் இருந்து 30 மில்லியன் பயணிகளாக உயர்த்தும்.

அதேபோல் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவில் செல்ல முடியும். இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்க உள்ளது. சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 8 ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதன்பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும்.
அதேபோல் தாம்பரம்-செங்கோட்டை இடையிலான விரைவு ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கிவைப்பார்.
மேலும் நாளை திருமங்கலம் - கொல்லம் NH744 நான்கு வழிச்சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.
திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம் பள்ளி இடையே 37 கி.மீ. அகல ரயில்பாதைத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கிவைப்பார்.

மதுரையில் தமிழ்நாட்டின் மிக நீண்ட பறக்கும் பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். மதுரை முதல் நத்தம் வரை மொத்தம் 44.3 கி.மீ தூரத்திற்கு தற்போது புறவழி பறக்கும் சாலை மத்திய அரசு மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசு பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் இந்த சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளாக இந்த பணிகள் நடந்து வருகின்றன.இந்த திட்டத்திற்கு இடையே மதுரை- நத்தம் ரோட்டில் 4 வழிச்சாலையாக பறக்கும் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த 44 கிமீ தேசிய நெடுஞ்சாலையில் மொத்தம் 7.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
காங்கிரீட் கர்டர் மூலம் இந்த தூண்கள் இணைக்கப்பட்டு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. 220 தூண்கள் இந்த பாலத்திற்காக அமைக்கப்பட்டு உள்ளன. பாலத்திற்கு மேலேயும், கீழேயும் நவீன எல்டிடி விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஊமச்சிகுளம் அருகே மாரணி பகுதி வரை இந்த பறக்கும் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் இடையில் இடையே இணைப்பு பாலங்கள் நான்கு இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications