தொடங்கியது பாமகவின் வெள்ளி விழா... 2500 இடங்களில் கொடியேற்றம்.. தொண்டர்கள் சபதம்!

Subscribe to Oneindia Tamil

PMK begins its silver jubilee year celebrations
சென்னை: தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி இன்று அதன் வெள்ளி விழா தொடங்கியது.

இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் இனிப்பு வழங்கியும், கட்சிக் கொடியேற்றியும் விழா கொண்டாடப்பட்டது.

பின்னர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பாமகவை வலுப்படுத்துவது தொடர்பாக வரும் 20ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

தமிழகத்தில் பாமக எப்போதும் ஆரோக்கியமான ஒரு எதிர்க்கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. 23ஆம் தேதி நடைபெறவுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகளின் போராட்டத்திற்கு பாமக முழு ஆதரவு அளிக்கும்.

கட்சி கடந்து வந்த பாதை, சந்தித்த சோதனைகள், பல்வேறு போராட்டங்கள் நடத்தி மக்கள் மனதில் இடம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி தொடர்ந்து மக்கள் பணியை இன்னும் சிறப்பாக நிறைவேற்ற வெள்ளி விழாவில் சபதம் ஏற்போம்.

இன்று ராயபுரம் சட்ட மன்ற தொகுதியில் சுமார் 250 இடங்களில் கட்சிக் கொடி ஏற்றப்படுகிறது. இதேபோல் 16 தொகுதியிலும் தொடர்ந்து விழாக்கள் நடைபெறும். நாளை ஆர்.கே.நகரில் நடக்கிறது. 1-ந்தேதி சைதாப்பேட்டையில் நிறைவு பெறுகிறது. அனைத்து தொகுதிகளிலும் வருகிற 1-ந்தேதிக்குள் 2500 இடங்களில் கொடி ஏற்றப்படும் என்றார் மூர்த்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+