நீட் எதிர்ப்பு.. சென்னையில் சிபிஎஸ்இ அலுவலகம் முற்றுகை.. மாணவிகளை தர தரவென இழுத்து கைது செய்த போலீஸ்
நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி சிபிஎஸ்இ அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய மாணவர்களை தடியடி நடத்தி போலீஸார் கலைத்தனர்.
Recommended Video

சென்னை : நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டி சென்னையில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்களை போலீஸார் கைது செய்யும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பலர் காயமடைந்தனர்.
மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வந்த நிலையில், நேற்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

இதனைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில், சென்னை அண்ணாநகரில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்தின் முன்பு அறவழிப் போராட்டம் நடந்தது.

இதில் கலந்துகொண்ட மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், தமிழக மக்களின் போராட்டத்திற்கு செவி சாய்க்காத மத்திய அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். இதனால் மாணவர்கள், போலீஸாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைக் கண்டித்து மாணவர்கள் போலீஸாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதனால் போலீஸார் மாணவர்கள் மீது தடியடி நடத்தியும், குண்டுக்கட்டாக அங்கிருந்து வெளியேற்றியும் வாகனங்களில் ஏற்றி கைது செய்ய முற்பட்டனர். போலீஸார் வன்முறைப் போக்கை கையாண்டதில் மாணவி ஒருவர் மயக்கமடைந்தார். மேலும், மாணவர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications