ரூ. 5000 லஞ்சம் கேட்டு மிரட்டல்... கலெக்டரிடம் மனு அளிக்க வந்த குடும்பத்தைத் தாக்கிய போலீஸ்!
சேலம்: பொய் வழக்குப் போடாமல் இருக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த குடும்பத்தினரை போலீசார் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் மோகன். இவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது குறித்த விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் மோகன் மீது மேலும் சில வழக்குகளை பதிவு செய்யப்போவதாக அம்மாபேட்டை போலீசார் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், அதுபோன்ற பொய் வழக்குகள் பதிவு செய்யாமல் இருக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சமாக கேட்டு அவர்கள் நிர்பந்தித்தாகத் தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர், பொய் வழக்குப் போடப்போவதாக மிரட்டுவதாக சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளிக்க வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும், மோகனின் செல்போனை பறித்து உடைத்ததாகவும், பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு இழுத்து சென்றதாகவும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications