கையில் லத்தியுடன் பெண்கள், குழந்தைகளை தரதரவென இழுத்துச் செல்லும்போலீசார்… கோவையில் பதற்றம்
கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை தரதரவென போலீசார் இழுத்துச் சென்றனர். வலுகட்டாயமாக வெளியேற்றுவதை மறுத்து போராட்டக்காரர்கள் தொடர் முழக்கம் செய்து வருகின்றனர்.
கோவை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கடந்த 6 நாட்களாக பெண்கள், மாணவிகள், மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை வ.உ.சி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், குழந்தைகளை போலீசார் தரதரவென இழுத்துச் சென்று போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
நேற்று ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்புக்குழுவினர் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வந்துவிட்டதால் போராட்டத்தை கைவிடுங்கள் என்று போராட்டக்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் நிரந்தர சட்டம் நிறைவேறும் வரை போராட்டம் செய்வோம் என்று தொடர்ந்து போராட்டக்களத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்நிலையில், இன்று காலையில் இருந்து போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் வேலையில் இறங்கி உள்ளனர். சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள், பெண்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.
Police at Chennai's Marina Beach begin removing protesters forcefully #Jallikattu pic.twitter.com/xZyrWNucX9
— ANI (@ANI_news) January 23, 2017
அந்த வகையில், கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், குழந்தைகளை போலீசார் லத்தியுடன் தரதரவென இழுத்துச் சென்று அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், கதறி அழுதனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பி கலைந்து செல்ல மறுத்து வருகின்றனர். போலீசார் வலுக்கட்டாயமாக போராட்டக்காரர்களை இழுப்பதும், போராட்டக்காரர்கள் வெளியேற மறுப்பதும் என இந்த கோவை வ.உ.சி மைதானமே ஒரு போராட்ட பூமியாக மாறியுள்ளது.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications