முதல்வர் பழனிச்சாமி இல்லம் முன்பு போராட்டம் நடக்க வாய்ப்பு.. அதிக அளவில் போலீஸ் குவிப்பு
சென்னையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: சென்னையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எப்போதும் இருக்கும் பாதுகாப்பை விட அதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த மனிதத்தன்மையற்ற தாக்குதல் காரணமாக, இதுவரை 14 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்னும் 100க்கும் அதிகமானோர் உயிருக்கு போராடியபடி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் இந்த கொடூர செயல் காரணமாக மக்கள் அரசின் மீது மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். முக்கியமாக அதிமுக தலைவர்கள் மீதும் மத்திய அரசு மீதும் கோபத்தில் உள்ளனர். பெயருக்கு கூட அதிமுக கட்சியை சேர்ந்த யாரும் இதுவரை தூத்துக்குடி மக்களை சென்று பார்க்கவில்லை.
இதனால் தமிழகம் முழுக்க போராட்டம் நடக்கிறது. சென்னையிலும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் முதல்வர் பழனிச்சாமி இல்லத்திற்கு முன் போராட்டம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில போராட்ட அமைப்புகள், கட்சிகள் முதல்வர் இல்லத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. உளவுத்துறை எச்சரித்ததால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications