27 பெண்களை பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது- விசாரணையில் 'திடுக்' தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: காதலிப்பதாக ஏமாற்றி 27க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த நவீன காதல் மன்னன் பொன்சிபி என்ற வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாசிலாமணிபுரம் ஸ்ரீநகரை சேர்ந்தவர் பொன் சிபி (21). இவர் மீது மதுரை ஆனையூர் முடக்கத்தான்சாலையை சேர்ந்த சந்திரமோகன் மகள் ரெஜினா (24) திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித் தார்.

அதில் " நான் பி.காம்.பட்ட தாரி. திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் வசிக்கும் எனது அக்கா வீட்டிற்கு அடிக்கடி வருவேன். அவ்வாறு வந்தபோது பொன்சிபி ஒருமுறை என்னை பின்தொடர்ந்தார். நான் அவரை கண்டு கொள்ளவில்லை. இருந்தபோதும் தொடர்ந்து என்னை பின் தொடர்ந்து வந்து காதலிப் பதாக தெரிவித்தார்.

பிளேடால் கையை அறுத்தார்

பிளேடால் கையை அறுத்தார்

நான் மறுத்தபோது பிளேடால் கையை அறுத்துகொண்டு நீ இல்லையென்றால் நான் இறந்துவிடுவேன் என்று கண்ணீர்விட்டு கதறினார். என் மனம் மாறி அவரை காதலிக்க தொடங்கினேன். தாயாரிடம் அறிமுகம் செய்துவைப் பதற்காக என்னை அவரது வீட்டிற்கு வரவழைத்தார். வீட்டிற்கு சென்றவுடன் மயக்கமருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து என்னை பலாத்காரம் செய்தார்.

திருமணமானது

திருமணமானது

எனது வற்புறுத்தலின்பேரில் இருவீட் டாருக்கும் தெரியாமல் கடந்த ஆண்டு மே 30ம்தேதி திண்டுக்கல் பெருமாள் கோவிலில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பிறகு 3 மாதங்கள் பொன்சிபியின் வீட்டில் வாழ்ந்து வந்தேன். எங்கள் திருமணம் அவரது தாய் ஹேமமாலினிக்கு தெரிய வரவே என்னை வீட்டை விட்டு விரட்டிவிடும்படி பொன் சிபியிடம் கூறினார். இதனால் என்னை பொன் சிபி கொடுமைப்படுத்த தொடங்கினார். எப்படியாவது என்னை வீட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பொன்சிபியும், அவரது நண் பர்களும் குறியாக இருந்தனர்.

கருவை கலைத்தார்

கருவை கலைத்தார்

ஒருமுறை எங்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கிரிக்கெட் மட்டையால் என்னை தாக் கியதில் என்வயிற்றில் இருந்த 3 மாத கரு கலைந்தது. இனிமேல் இங்கிருந்தால் என் உயிருக்கு ஆபத்து என்று உணர்ந்து வீட்டைவிட்டு வெளியேறினேன். தற்போது எனக்கு அச்சுறுத்தல் இருந்து வருவதால் எனக்கு உயிர் பாதுகாப்பு அளிக்கவேண்டும், என்னை ஏமாற்றிய பொன் சிபி மற்றும் அவரது தாய் ஹேமமாலினி, உறவினர் ராஜா என்ற ஞானராஜா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

திடுக்கிடும் உண்மைகள்

திடுக்கிடும் உண்மைகள்

போலீஸ் விசாரணையில் சிபி பற்றி தோண்டதோண்ட பல உண்மைகள் வெளியாகின. பிளஸ்-2 வரை மட்டுமே படித்த பொன் சிபி அதன்பிறகு திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் சேர்ந்தார். இவரது காதல் வலையில் ஏராளமான பெண்கள் விழுந்துள்ளனர்.

பழைய டெக்னிக்

பழைய டெக்னிக்

பெண்களை காதலிப்பதாக கூறி அவர்களை வீட்டிற்கு வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அவர்களை ஆபாச படம் எடுத்து நண்பர்களுக்கு காட்டுவது இவரது வாடிக்கை. மாசிலாமணிபுரம் ஸ்ரீநகரில் உள்ள அவரது வீட்டில்தான் இந்த கூத்துகள் எல்லாம் நடந்துள்ளன.

தாய் அப்படித்தான்..

தாய் அப்படித்தான்..

அந்த பகுதிவாசிகள் கூறுகையில் "சிபியின் தாய் விஐபி ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டுள்ளதால் மகனை கண்காணிப்பதில்லை. வெளியூரில் வசித்தபடி, சிபிக்கு அவனது தாய் மாதந்தோறும் பல ஆயிரங்களை செலவுக்கு அனுப்பிவிடுவார். அந்த பணத்தை வைத்துக் கொண்டு கல்லூரிக்கு செல்லாமல் மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றுவது, பெண்களை மயக்கி படம் எடுப்பது, இரவு நேரங்களில் பார்களில் மது அருந்துவது போன்ற ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இந்த வீட்டையே புளூ பிலிம் எடுக்கும் இடமாக மாற்றிவிட்டாரே" என்று ஆதங்கம் தெரிவித்தனர்.

பள்ளி மாணவிகளும் பாழ்

பள்ளி மாணவிகளும் பாழ்

இவரது காதல் வலையில் பள்ளி மாணவிகளும் விழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். பள்ளி சீருடை அணிந்த மாணவிகள் பலர் அடிக்கடி சிபி வீட்டுக்கு வருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

இதில் பலர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தால் நமக்குத்தான் அவமானம் என்று நினைத்து விலகிவிட்டனர். சிலர் பணத்திற்காகவும் இவரிடம் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். இதை சாதகமாக்கி கொண்டு 27க்கும் மேற்பட்ட பெண்கள் வாழ்க்கையுடன் பொன் சிபி விளையாடி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அமைச்சர் விளக்கம்

அமைச்சர் விளக்கம்

அதிமுக பிரமுகர் ஒருவருடன்தான் சிபியின் தாயார் நெருக்கமாக இருப்பதால், போலீசார் சிபி மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும், சிபிக்கு ஆதரவாக அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் இருந்து போலீசாருக்கு போன் வந்ததாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து நத்தம் விஸ்வநாதன் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், "அதுபோன்ற எந்த போனையும் போலீசாருக்கு நான் போட்டு பேசவில்லை. எனது பெயரை தவறாக பயன்படுத்தியிருந்தால் அவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். மேலும், சட்டப்படி காவல் துறை எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதில் எனது தலையீடு இருக்காது" என்றார்.

பம்மிய போலீசார்

பம்மிய போலீசார்

பொன் சிபி மீது தைரியமாக ரெஜினா புகார் தெரிவித்தபோது போலீசார் முதலில் அதனை வாங்க மறுத்தனர். அதன்பிறகு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் தெரிவித்து மாதர் சங்க அமைப்பிடம் தனது நிலையை எடுத்துக்கூறவே திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத் தில் கடந்த 13-ந் தேதி வழக்குபதிவு செய்யப் பட்டது. போலீசார் பொன்சிபி, அவரது தாய் ஹேமமாலினி, ஞானராஜ் ஆகிய 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்தனர்.

'மாமியார் வீட்டில்' பொன் சிபி

'மாமியார் வீட்டில்' பொன் சிபி

பொன் சிபி மீது மட்டும் 498ஏ, 294பி, 406, 417, 506(1), பெண் பாலியல்வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். போலீசார் தேடி வரு வதை அறிந்ததும் தலை மறைவு வாழ்க்கை வாழ தொடங்கினார். கரூரில் பொன் சிபி தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக் கவே அங்கு விரைந்தபோது கரூர் ரயில் நிலையத்தில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+