'கரண்ட கட்'... ப.சிதம்பரம் 'மூட்அவுட்'.. கலியாந்தூரில் ஒரு 'டென்ஷன்'!
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கலியாந்தூர் கிராமத்தில் நடந்த கூட்டத்தின்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பாதியிலேயே கிளம்பிப் போய் விட்டார்.
கலியாந்தூரில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 14லட்ச ரூபாய் செலவில் சமுதாய கூடம் கட்டப்பட்டு நேற்று ப.சிதம்பரம் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது. விழா பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது.
ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தலைமை வகித்தார். பிடிஓக்கள் பரமசிவம், குமரகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ப.சிதம்பரம் சமுதயா கூடத்தை ரிப்பன் வெட்டி பிறந்து வைத்தார். பின் பாங்க் ஆப் பரோடா வங்கியின் பச்சேரி கிளை சார்பாக பயனாளிகள் 23 பேருக்கு தலா 30ஆயிரம் வீதம் கறவை மடு வாங்க காசோலையை வழங்கினார்.

இதையடுத்து ப.சிதம்பரம் பேச தொடங்கும் போது கரண்ட் கட் ஆனது. சிறிது நேரம் பொறுத்து பார்த்தார் ப.சிதம்பரம். மின்சாரம் மீண்டும் வருவதாகத் தெரியவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர் பேசாமல் திரும்பிச் சென்றார். அதிகாரிகளும் ப.சிதம்பரத்தை பின்தொடர்ந்து சென்று விட்டனர்.
வழக்கமாக ப.சிதம்பரம் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் சிவகங்கை மாவட்டத்தில் வங்கி கிளைகளை திறப்பது வழக்கம். அந்த சமயத்தில் மின்தடை இல்லாமல் பார்த்து கொள்வது வழக்கம். ஆனல் வழக்கத்திற்கு மாறாக நேற்று பேச ஆரம்பித்தவுடன் கரண்ட் கட்டானதால் ப.சிதம்பரம் விழாவில் பேசாமலேயே சென்று விட்டார்.












Click it and Unblock the Notifications