பைக் மோதி கர்ப்பிணி பெண் பலி - கொலையா என்ற கோணத்தில் விசாரணை தீவிரம்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோட்டில் பைக் மோதி கர்ப்பிணி பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனை கொலையா, விபத்தா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், பவானி அருகிலுள்ள அத்தாணி ஓடைமேடு பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவர் மனைவி அந்தியூர் மாத்தூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த கவிதா. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. கடந்த சில மாதங்களாக கர்ப்பிணியான கவிதா குடும்ப தகராறு காரணமாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் இருந்தார்.

pregnant lady died in Erode

இதற்கிடையில் கணவர் வீட்டாருடன் சமரசம் பேச முடிவு செய்த கவிதா அவருடைய தாயார் கனகாவுடன் கடந்த 1 ஆம் தேதி இரவு அத்தாணியில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்றார். மகளை விட்டுவிட்டு முதலில் கனகா அங்கிருந்து திரும்பிவிட்டார்.

அங்கிருந்த கவிதாவை அவருடைய கணவர் வீட்டார் விரட்டி விட்டதால் இரவு 11 மணி அளவில் கோபி பிரிவு அருகே கவிதா மட்டும் தனியாக நடந்து வந்துள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு பைக் மோதியதில் சம்பவ இடத்தில் கவிதா பலியனார்.

இதுகுறித்து தகவலறிந்த ஆப்பக்கூடல் போலீசார் சாலை விபத்து என வழக்குப்பதிவு செய்தனர். கவிதாவின் பெற்றோரோ, வீரமணி குடும்பத்தினர் திட்டமிட்டு வாகனத்தில் மோதி கவிதாவை கொன்று விட்டதாக புகார் தெரிவித்தனர். இதனால் கவிதா பலியான சம்பவம் விவகாரமாகியுள்ளது.

இந்நிலையில் அத்தாணி அருகிலுள்ள செம்புளிச்சாம்பாளையம் என்ற ஊரை சேர்ந்த குமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும், இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+