மதுரையை உலுக்கிய மாணவ, மாணவியர்கள்.. தொடர் போராட்டத்தால் பரபரப்பு!
மதுரை தமுக்கம் மைதானத்தில் நீட் தேர்வை ரத்து செய்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர் போலீசார்.
மதுரை : ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த மதுரை தமுக்கம் மைதானத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய, மாநில அரசை வலியுறத்தியும் மதுரை தமுக்கம் மைதானத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போரோட்டத்தில் ஈடுபட்டனர். தமிழன்னை சிலை மீது ஏறிப் போராடிய அவர்களை போலீஸார் கடும் சிரமப்பட்டு அகற்றினர். பின்னர் சிலை முன்னர் கூடியமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடையை மீறி கூடிய மாணவர்களை போலீசார் தரையில் இழுத்துச் சென்றும், குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றும் போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். சமூக வலைதளங்கள் மூலமாக இந்த இடத்தில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு வந்தது, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இந்த இடத்தில் தான் பிரம்மாண்ட போராட்டம் நடந்தது என்பதால் மாணவர்களை ஒன்றுகூட விடாமல் போலீசார் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

போராட்டத்தால் பரபரப்பு
இந்தப் போராட்டம் காரணமாக தமுக்கம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவர்களின் திடீர் போராட்டத்தால் மதுரை நகரம் காலை முதல் பரபரப்பாக காணப்படுகிறது.

தள்ளாகுளத்தில் மறியல்
இதனிடையே தமுக்கம் மைதானம் பகுதியில் மாணவர் அமைப்பினரின் போராட்டத்தையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் தமுக்கம் மைதானம் பகுதிக்கு செல்லாமல் மாணவர்கள் தள்ளாக்குளம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தள்ளாகுளம் அவுட் போஸ்ட் பகுதியில் பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையில் அமர்ந்து கோஷம்
சாலையில் அமர்ந்து ஒருவருக்கொருவர் கைகளைக் கோர்த்துக் கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். நீட் தேர்வை ரத்து செய்வதாக மத்திய, மாநில அரசுகள் உறுதியளித்தால் மட்டுமே போராட்டங்கள் ஓயும் என்று மாணவர்கள் கோரி வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வலுக்கட்டாயமாக கைது
இதனையடுத்து பள்ளி மாணவிகளை பெண் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதே போன்று போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் வலுக்கட்டாயமாக இழுத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவிகளை வலுக்கட்டாயமாக போலீசார் அகற்றினர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications