புதுச்சேரியில் இனி “சரக்கு” மழை– இரவு 11 மணி வரை பொழியுமாம்!
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: மதுவகைகளுக்கு பெயர் போன புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்திற்காக மதுபான விற்பனை செய்யும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மதுபான மொத்த விற்பனை கடைகள் காலை 9.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை திறந்திருக்கும். சில்லரை விற்பனை கடைகள், காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சில்லரை விற்பனை உரிமத்தில் சுற்றுலாப் பிரிவின் கீழ் 89 மதுபான விற்பனையகத்தில் விற்பனை செய்யும் நேரத்தை கலால்துறை நீட்டித்துள்ளது.
அதன்படி காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை மதுபானம் விற்பனை செய்ய கலால்துறை அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் வேண்டுகோளுக்கு இணங்க இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக கலால்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications