திக்.. திக் தினகரன் கோஷ்டி.. அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதிக்குள் நுழைந்த புதுச்சேரி போலீஸ்!
சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதியில் புதுச்சேரி போலீசார் திடீர் ஆய்வு நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கி உள்ள புதுச்சேரி விடுதியில் போலீசார் இன்று சோதனை நடத்தினர். புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராஜீவ்ரஞ்சன் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் புதுச்சேரி விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி அதிமுக நிர்வாகிகள், ஓம்சக்தி சேகர் தலைமையில் விடுதி அருகேர ஆர்பாட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது
எம்எல்ஏக்கள் தங்கியுள்ளதால் புதுச்சேரியில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படுவதாக, ஓம்சக்தி சேகர் அளித்த புகாரை தொடர்ந்து இந்த ஆய்வு நடைபெற்று வருவதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களால் சட்டம் ஒழுங்கு கெடுவதாக போலீசார் கருதி வெளியேறச் சொன்னால் அடுத்தகட்டமாக எங்கே செல்வது என்பது குறித்து தினகரன் ஆலோசித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications