சாருக்கு ரெண்டாம் தாரமாக கூட நீ செட்டிலாகிவிடலாம்... எப்படி பேசியிருக்காங்க பாருங்க இந்த புனிதா!
Recommended Video

திருவண்ணாமலை: சாருக்கு ரெண்டாம் தாரமாக கூட நீ செட்டிலாகிவிடலாம் என சென்னை மாணவியை விடுதி வார்டன் மூளைச் சலவை செய்துள்ளார்.
சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் இளம்பெண், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த வாழவச்சனூரில் உள்ள தமிழ்நாடு அரசு வேளாண் கல்லூரி விடுதியில் தங்கி பி.எஸ்சி 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
இக்கல்லூரிக்கென இருபாலர் தங்கும் விடுதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன. கல்லூரியில் உதவி பேராசிரியராக மதுரையை சேர்ந்த தங்கபாண்டியன் (40) பணிபுரிந்து வருகிறார்.

ஆசைக்கு இணங்க வேண்டும்
இவர் இரவு நேரங்களில் பெண்கள் தங்கியுள்ள விடுதிக்கு சென்று அங்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்துள்ளது. அங்குள்ள சென்னை மாணவியை ஆசைக்கு இணங்குமாறு அவர் வலியுறுத்தி வந்துள்ளார்.

மூளைச் சலவை
அந்த மாணவி விடுதி வார்டன் புனிதா மற்றும் மைதிலி ஆகியோரிடம் புகார் கூறியுள்ளார். கொடுமை கொடுமை என்று கோயிலுக்கு சென்றால் அங்கு அதை விட பெரிய கொடுமை ஜிங்ஜிங்குன்னு ஆடுச்சாம்னு கிராமப்புறங்களில் ஒரு சொலவடை உள்ளது. அதற்கேற்றாற்போல் அந்த வார்டன் இருவரும் தங்கபாண்டியனின் ஆசையை நிறைவேற்றுமாறு மாணவியை பிரெய்ன் வாஷ் செய்துள்ளனர்.

நல்ல மதிப்பெண்
அதிலும் புனிதா அந்த மாணவியை தொடர்பு கொண்டு பேசுகையில் தங்கப்பாண்டியன் சாரின் ஆசையை நிறைவேற்றிவிடு. அவர் ஆசைக்கு இணங்கினால் நீ படிக்காமலேயே நல்ல மதிப்பெண் பெறுவாய்.

வாழ்க்கையில் செட்டில்
தங்க பாண்டியன் சாரை அட்ஜெஸ்ட் செய்தால் நீ அவருக்கு 2-ஆம் தாரமாகவும் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம். எனவே எதற்கும் தயங்காதே உடனே ஒப்புக் கொள். நீ என்னதான் என் மீது புகார் கொடுத்தாலும் ஒன்றும் நடக்காது என்று பேசியுள்ளார். இந்த டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகமாகவே அந்த மாணவி சென்னையில் உள்ள பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸ் டிஎஸ்பி விசாரணை நடத்தி வருகிறார்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications