பொருளாதார சிக்கலில் இருந்தேன்... அதனால் மாணவிகளை "அதுக்கு: அழைத்தேன்- புனிதா பரபர
பொருளாதார சிக்கலில் இருந்ததால் மாணவிகளை விபசாரத்துக்கு அழைத்தேன் என்று புனிதா வாக்குமூலம் அளித்துள்ளார்.
Recommended Video

கோவை: பொருளாதார சிக்கலில் இருந்ததால் அதில் இருந்து மீள மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சித்தேன் என்று கோவை விடுதி காப்பாளர் புனிதா வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவை பீளமேட்டில் தர்ஷனா ரெசிடென்சி என்ற பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு பணிக்கு செல்லும் மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் ஏராளமானோர் தங்கியிருந்தனர்.
இவர்களை விடுதி காப்பாளர் ஜெகந்நாதனுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள புனிதா வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் புகாரின் பேரில் பீளமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து ஜெகந்நாதனையும் புனிதாவையும் தேடி வந்தனர்.

ஜெகந்நாதன்
இருவரும் தலைமறைவானதை அடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு இருவரும் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஜெகந்நாதன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலங்குளத்தில் ஒரு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

2 நாட்கள் விசாரிக்க அனுமதி
இந்நிலையில் கடந்த 1-ஆம் தேதி கோவை மாஜிஸ்ரேட் முன்பு புனிதா சரணடைந்தார். அவரை வரும் 14-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 2 நாட்கள் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் அனுமதி கேட்டனர்.

சென்னையில் இருந்தேன்
இதையடுத்து புனிதாவை இரு நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்போது போலீஸார் நடத்திய விசாரணையில் தான் இத்தனை நாட்கள் சென்னையில் இருந்ததாக கூறியுள்ளார்.

பணம் தருவதாக உறுதி
அதுபோல் மேலும் விசாரணையில் நான் பொருளாதார ரீதியாக சிக்கலில் தவித்து வந்தேன். அந்த சமயத்தில் என்னிடம் ஜெகந்நாதன் பாலியல் தொழிலுக்கு மாணவிகளை மூளை சலவை செய்து அனுப்புமாறு கேட்டார். இதை செய்தால் எனக்கு பணம் தருவதாக அவர் கூறினார்.

பரபரப்பு
அதனால்தான் நான் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு செல்ல கட்டாயப்படுத்தினேன் என்று புனிதா வாக்குமூலமாக அளித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பைக்கில் பள்ளிக்கு வரும் மாணவர்களா நீங்க? உஷார்.. தமிழக பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு! -
மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஜூன் 4ல் புத்தகம், சீருடை வழங்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications