திருமா இல்லாத மநகூ... அஜெண்டாவை செயல்படுத்த துடியாய் துடிக்கும் வைகோ, இடதுசாரிகள்!
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகளை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மதிமுக, இடதுசாரிகள் செயல்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை: "விடுதலைச் சிறுத்தைகள் இல்லாத "மநகூ" இதுதான் மதிமுகவினரின் தற்போதைய கோரிக்கை.. இதை செயல்படுத்தவே விடுதலைச் சிறுத்தைகளை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மதிமுக பொதுச்செயலர் வைகோ செயல்படுவதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.
மக்கள் நலக் கூட்டணிக்கான முதல் அடையாளமே சட்டசபை தேர்தலின் போது மதுரையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டம்தான்... அந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு காரணமே விடுதலைச் சிறுத்தைகள்தான் என ஊடகங்கள் சுட்டிக்காட்டின.
அங்கிருந்துதான் விடுதலைச் சிறுத்தைகள் மீதான மதிமுகவின் அதிருப்தி தொடங்குகிறது... விடுதலைச் சிறுத்தைகள் இருந்தால் பிற ஜாதி வாக்குகள் கிடைக்காது என்ற எண்ணம் திமுகவுக்கு மட்டுமல்ல... மதிமுகவினருக்கும் உண்டு.

பொங்கும் மதிமுக
மதிமுகவினரைப் பொறுத்தவரையில் மக்கள் நலக் கூட்டணியில் நாங்கள்தான் பெரிய கட்சி; அனைத்து கிராமங்களிலும் எங்களுக்கு கிளை கழகங்கள் உண்டு; ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சேரிகளில்தானே கிளை கழகங்கள் இருக்கின்றன என சிந்தனை அப்பட்டமானதாக இருக்கிறது. ஆகையால் மக்கள் நலக் கூட்டணியின் பலமே விடுதலைச் சிறுத்தைகள் என ஊடகங்கள் எப்படி எழுதலாம் என பொங்குகின்றனர்.

திருமா இல்லா கூட்டணி
விடுதலைச் சிறுத்தைகள் இல்லாத மக்கள் நலக் கூட்டணிதான் மிகச் சரியானது; திருமாவளவனை நாங்கள் ஒரு தமிழ்த் தேசியவாதியாகத்தான் கருதிவந்தோம்... ஆனால் நடைமுறையில் அவர் அப்படி இல்லை என்கிற குற்றச்சாட்டையும் மதிமுகவினர் வைக்கின்றனர்.

ஆட்சேர்ப்பு வாதம்
எங்களுக்கு மட்டுமல்ல.. இடதுசாரிகளும் கூட விடுதலை சிறுத்தைகள் இல்லாத மக்கள் நலக் கூட்டணியைத்தான் விரும்புகின்றன என்றும் 'ஆட்சேர்ப்பு' வாதங்களையும் மதிமுகவினர் முன்வைக்கின்றனர்.

திருமாவுக்கு நெருக்கடி
இந்த சூழ்நிலையில் திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க விரும்புகிறோம்; ஆலோசனை நடத்தப் போகிறோம் என திருமாவளவன் கூறிய போதும் வைகோ தன்னிச்சையாக, திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டத்தை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்கும் என அறிவித்து விடுதலை சிறுத்தைகளை நெருக்கடிக்குள்ளாக்கியதாக கூறப்படுகிறது. இருந்தபோதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மீண்டும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியது.. 3 தொகுதி தேர்தலில் போட்டியிடாத நிலையில் அதை காரணமாக வைத்து திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு போக கூடாது என மீண்டும் திருமாவளவனை இக்கட்டில் தள்ளிவிட்டனர் மநகூ தலைவர்கள்...

வெளியேற்ற முயற்சி
எப்படியாவது விடுதலைச் சிறுத்தைகளை வெளியேற்றிவிட வேண்டும் என்பதில் மதிமுகவும் இடதுசாரிகளும் கை கோர்த்து செயல்படுகின்றனர்... திருமாவும் எத்தனை காலம் 'பெரும்பான்மை' கட்சிகளின் கருத்து ஏற்று பொறுமை காப்பார் என்பதுதான் தற்போதைய கேள்வி.
-
திருமாவளவனை மீறி.. ஆளூர் ஷாநவாஸ் திமுகவுடன் நெருக்கம்.. "ஒன்இந்தியாவிடம்" குமுறிய சங்கத்தமிழன்! -
தமிழக அரசியலுக்கு திருமாவளவன் திரும்பியது ஏன்? உளவுத்துறை எடுத்த நோட்ஸ்.. கசிந்த சீக்ரெட்? -
விசிக திருமாவளவன் களமிறங்கும் காட்டுமன்னார்கோவில்! 8 வேட்பாளர்களும் இன்றே வேட்புமனுத் தாக்கல்? -
3 எம்பிக்கள் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி.. யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.. பின்னணி -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications