For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜயகாந்த் ஒரு முட்டாள்.. சொல்கிறார் "வைதேகி காத்திருந்தாள்" சுந்தரராஜன்!

Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை முட்டாள் என்று அநாகரீகமாக விமர்சித்துள்ளார் இயக்குநர் ஆர். சுந்தரராஜன்.

அதிமுக சார்பில் ஏகப்பட்ட திரையுலகினர் ஊர் ஊராகப் போய் பிரச்சாரம் செய்து பேசி வருகின்றனர். விந்தியா முதல் ஆனந்தராஜ் வரை பலரும் பேசி வருகின்றனர்.

R Sundararajan comes down heavily on Vijayakanth

இவர்களில் பெரும்பாலானவர்கள் விஜயகாந்த்தைத்தான் கடுமையாகத் தாக்கிப் பேசுகின்றனர். குறிப்பாக சிங்கமுத்து விஜயகாந்த் மாதிரியே பேசி கிண்டலடித்துப் பேசுகிறார்.

இந்த நிலையில் ஆர். சுந்தரராஜன் பேசிய பேச்சைக் கேட்க முடிந்தது. அதில் அவர் விஜயகாந்த்தை கடுமையாகத் தாக்கிப் பேசினார். அவர் பேசுகையில், நான் விஜயகாந்த்தை வைத்து வைதேகி காத்திருந்தாள், என் ஆசை மச்சான், அம்மன் கோவில் கிழக்காலே என சில படங்களை பண்ணியுள்ளேன்.

அவர் ஒரு முட்டாள். ஒருமுறை விஜயகாந்த் ஆபீஸுக்குப் போயிருந்தேன். அவர் வெளியில் உட்கார்ந்திருந்தார். ஏங்க வெளில உட்கார்ந்திருக்கீங்க என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் கரண்ட் இல்லை என்றார். உடனே நான் அப்படியா அங்க கடைல கொடுக்கிறாங்களே வாங்கிட்டு வர வேண்டியதுதானே என்று தமாஷுக்கு சொன்னேன்.

அதற்கு அவர் உள்ளே எட்டிப் பார்த்து உதவியாளரை அழைத்து அங்க கரண்ட் கொடுக்கிறாங்களாம், போய் வாங்கிட்டு வான்னார். அந்த உதவியாளரும் உடனே வாளியை எடுத்து வாங்கி வரக் கிளம்பினார். அதைப் பார்த்த நான் இரும்பு வாளி வேணாம்ப்பா ஷாக் அடிக்கும், பிளாஸ்டிக் வாளியை எடுத்துப் போன்னேன்.

நான் தமாஷுக்கு சொன்னதை நிஜம்னு நம்பி இவரும் அனுப்புறார், அவரும் போறார். இப்படி ஒரு முட்டாளைப் போய் முதல்வர் வேட்பாளராக சொல்றாங்க என்று பேசினார் சுந்தரராஜன்.

தனது பேச்சு முழுவதும் விஜயகாந்த்தை அவர் ஒருமையில்தான் விளித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆமா, கரண்ட் என்றால் என்ன என்று கூடவா தெரியாத அளவுக்கு விஜயகாந்த் இருந்திருப்பார்.. அதுவும் "பழைய" விஜயகாந்த்??.. இப்படிக் கிண்டலடிச்சதுக்கு தூக்கிப் போட்டு மிதித்திருக்க மாட்டார்.. சொல்லுங்கண்ணா சுந்தரராஜண்ணா!

English summary
Director and ADMK speaker R Sundararajan came down heavily on DMDK Vijayakanth and dubbed him as fool.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X