‘ஃப்ரி செக்ஸ்’.. ராதா ராஜன் மீதான வழக்கு.. பிப். 13க்கு ஒத்தி வைப்பு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் திரண்ட கூட்டத்தை கொச்சைப்படுத்தி ராதா ராஜன் பேசினார். இதுதொடர்பான வழக்கை பிப்ரவரி 13ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் ஒத்தி வைத்துள்ளது.
சென்னை: விலங்கு நல ஆர்வலர் என்ற பெயரில் தமிழர்களை கொச்சைப்படுத்தி பேசினார் ராதா ராஜன். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் போராட கூடிய கூட்டத்தை அவமானப்படுத்திய அவர் மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை வரும் 13ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற போது, "ஃப்ரிசெக்ஸ் என்று சொன்னால் கூட மெரினாவில் 5000 பேர் கூடுவார்கள்" என்று மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தினார் விலங்கின ஆர்வலர் ராதா ராஜன்.

அவருடைய இந்தக் கருத்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ராதா ராஜனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தார்கள். இதனைத் தொடர்ந்து, பெண் வழக்கறிஞர் ஆதிலட்சுமி என்பவர் பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அவதூறாக பேசிய ராதா ராஜன் மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் வந்த நிலையில், வழக்கை வரும் 13ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications