ஆர்எஸ்எஸ், மோடி தோட்டாக்களால் தமிழர் உணர்வை நசுக்க முடியாது... ராகுல் ஆவேசம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி. ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு அடிப்பணிய மறுப்பதால்தான் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
Recommended Video

டெல்லி: ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு அடிப்பணிய மறுப்பதால்தான் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்றே கண்டனம் தெரிவித்து செய்தி வெளியிட்டார்.

இந்த நிலையில், இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் ஒரு செய்தியை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், ஏனென்றால் அவர்கள் ஆர் எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை
— Rahul Gandhi (@RahulGandhi) May 23, 2018
நசுக்க முடியாது. தமிழ் சகோதர சகோதரிகளே , நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.#SterliteProtest
"தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், ஏனென்றால் அவர்கள் ஆர் எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது. தமிழ் சகோதர சகோதரிகளே , நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்."
இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications