காமராஜர் ஆட்சி ... தமிழக கிராமங்கள் தோறும் ராகுல் சுற்றுப்பயணம் - திருநாவுக்கரசர்
சென்னை: தமிழகத்தின் மீது நேசமும், பிரியம் கொண்டுள்ள ராகுல்காந்தி விரைவில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகளை பேசப்போகிறாராம். கட்சியை வலுப்படுத்தவே இந்த பயணம் என்று மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி என்றாலே கோஷ்டிகள் நிறைந்தது. அதுவும் தமிழக காங்கிரஸ் கட்சி பற்றி கேட்கவே வேண்டாம். 15 தலைவர்கள் இருந்தால் 15 கோஷ்டிகள் இருக்கிறார்கள். மகளிர் அணியிலும் 3 கோஷ்டிகள் உருவாகி விட்டன.
சத்தியமூர்த்தி பவனில் அனைவரும் ஓன்று கூடினாலே சண்டையும், சட்டை, சேலை கிழிப்புகள் நடக்காமல் இருக்காது. இந்த சூழ்நிலையில்தான் கட்சியை வலுப்படுத்த, நிர்வாகிகளை சந்தித்து பேச ராகுல்காந்தி மீண்டும் தமிழகம் வர இருக்கிறார்.
சத்தியமூர்த்தி பவனுக்குள் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் அடியெடுத்து வைத்த, ராகுல்காந்தி தமிழக அரசியல் பற்றி அதிகம் பேசினார். மீண்டும் காமராஜர் ஆட்சி வரவேண்டும் என்றும் கூறினார். அதற்காக கட்சி நிர்வாகிகள் தலைவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு மக்களை சந்திக்க வேண்டும் என்றார்.

உறுப்பினர் சேர்க்கை
இந்த கருத்தை ஏற்றுக்கொண்ட மாநில தலைவர் திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணியை தொடங்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக காங்கிரசுக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி ஒரு மாத காலம் நடைபெறும் என்றார்.

ராகுல் தமிழகம் வருகை
காங்கிரஸ் துணைத்தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக ராகுல்காந்தி சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்தார். உறுப்பினர்களுடன் உரையாடினார். நிறைய பேருக்கு உரையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதை கருத்தில்கொண்டு விரைவில் ராகுல்காந்தி மீண்டும் தமிழகம் வர உள்ளார்.

அரசியல் குழப்பம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த ராகுல்காந்தி, தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பம் காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது என்றும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் கிராமங்களுக்கு சென்று மக்களுடன், மக்களாக பழக வேண்டும் என்றும், தேவைப்பட்டால் உங்களுடன் நானும் பணியாற்ற வருவேன் என்றும் தெரிவித்து இருந்தார்.

தமிழகம் சுற்றுப்பயணம்
தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை கொண்டுவர ராகுல்காந்தி ஆசைப்படுகிறார். இதற்காக முதற்கட்டமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அவர் நிர்வாகிகளை சந்திக்கிறார். காங்கிரசை வலுப்படுத்த உள்ளார். ராகுல்காந்தியின் சுற்றுப்பயணத்திற்கு நாம் தயாராக இருக்கவேண்டும்.

சட்டசபையில் நிலை
சட்டசபையில் ஒருவேளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் நாங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து கூட்டணி கட்சியான திமுகவுடன் கலந்து பேசி முடிவு செய்வோம் என்றும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

காமராஜர் ஆட்சி
காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் ஆட்சி பற்றி கனவு காணலாம். அதற்காக முயற்சியும் செய்யலாம். ஆனால் இப்போது தமிழக காங்கிரஸ் கட்சியில்
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications