சென்னை மாவட்ட போக்குவரத்து இணை ஆணையர் வீட்டில் திடீர் ரெய்டு.. பண்ணை வீட்டிலும் அதிரடி சோதனை
போக்குவரத்து இணை ஆணையரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: சென்னை மாவட்ட போக்குவரத்து இணை ஆணையரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவர் சென்னையில் சாலைப் போக்குவரத்து இணை ஆணையராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், மோகனூர் சாலையில் உள்ள அவரது வீட்டில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தற்போது அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு சொந்தமான கீரம்பூரில் உள்ள பண்ணை வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
வேலுசாமியின் குடும்பத்தாரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்ட ஒழிப்புத்துறையைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவினர் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இணை ஆணையர் வேலுச்சாமி இந்த மாதத்துடன் பணி ஓய்வு பெற போகும் நிலையில், லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்தி வரும் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications