சென்னை, மதுரையில் அடுத்த கட்ட போராட்டம் வெடித்தது... ரயில்களை மறித்து இளைஞர்கள் ஆவேசம்
தமிழக அரசுக்கு மெரினா போராட்டக்குழுவினர் விதித்த கெடு 12 மணி வரையுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டத்தை இளைஞர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்றக்கோரி சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் பகல் 12 மணி வரை தமிழக அரசுக்கு கெடு விதித்திருந்தனர். ஆனால் 12 மணியை கடந்தப் பிறகும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சென்னையில் போராட்டக்குழுவினர் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று டெல்லி சென்றார். இன்று பிரதமரை நேரில் சந்தித்த அவர், ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பேசினார்.

ஆனால் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற முடியாது என பிரதமர் கைவிரித்துவிட்டார். இந்நிலையில் அவசர சட்டம் இயற்றக்கோரி மெரினா போராட்டக்குழு இன்று பகல் 12 மணி வரை கெடு விதித்திருந்தது.
கெடு முடிந்துள்ள நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் இளைஞர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயிலை மறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதால் தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதேபோல் சேலத்தில் காரைக்கால்-பெங்களூரு ரயிலை மறித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞர்கள் மத்திய அரசுக்கும் பீட்டாவுக்கும் எதிராக முழக்கமிட்டனர்.
மதுரையிலும் இளைஞர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications