ராஜபாளையத்தில் 18 நாட்களில் 16 பேர் பலி: பரவும் 'டெங்கு?'- 3 அமைச்சர்கள் முகாம்
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 18 நாட்களில் 16 குழந்தைகள் மர்ம காய்ச்சலுக்கு பலியான சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் அடுத்தடுத்து பலியாவதை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பொதுமக்களின் அச்சத்தை போக்க மூன்று அமைச்சர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் ராஜபாளையத்தில் முகாமிட்டுள்ளனர்.
ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 18 நாட்களில் மட்டும் 15 குழந்தைகள் மர்ம காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். டெங்கு காய்ச்சல் என்றால் பீதி அதிகரிக்கும் என்பதால் வைரஸ் காய்ச்சல் என்றும் மர்ம காய்ச்சல் என்றும் அதிகாரிகள் சமாளித்து வருகின்றனர்.

இந்தநிலையில் 35வது வார்டைச் சேர்ந்த சரவணன் என்பவரின் 4 வயது மகள் அனு, சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். தங்கள் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு நிலவுவதால்தான், பெருமளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த் தாக்குதல் அதிகரிப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கொசுக்களின் உற்பத்தியிடமாகத் திகழும் கொண்டனேரி கண்மாயை சுத்தப்படுத்தக்கோரி, நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தென்காசி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, கண்மாயை சுத்தப்படுத்தும் பணிகளை தொடங்கப்பட்ட பின்னரே போராட்டம் கைவிடப்பட்டது.
நிலவேம்பு குடிநீர் விநியோகித்தல், துப்புரவு பணிகளை மேற்கொள்ளுதல், கொசு ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் களைந்து சென்றனர்.
போர்க்கால நடவடிக்கை
இதனிடையே ராஜபாளையத்தில், வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவித்துள்ளது.
அமைச்சர்கள் முகாம்
வைரஸ் காய்ச்சல் தடுப்புப் பணிகளைக் கண்காணித்து முடுக்கி விடுவதற்காக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் ஆகிய மூவரும் ராஜபாளையத்தில் முகாமிட்டிருப்பதாக அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் முகாம்
மேலும், கொசுக்கள் அதிகமுள்ள பகுதிகளாகக் கண்டறியப்பட்ட 11 வார்டுகளில், தலா ஒருவர் வீதம் 11 நகராட்சி ஆணையர்கள் நியமிக்கப்பட்டு, கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மருத்துவக்குழுக்கள் ஆய்வு
5 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு, வீடுதோறும் காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருவதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications