For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தமிழகத்துக்கு பேராபத்து - நாஞ்சில் சம்பத் கொந்தளிப்பு

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பேராபத்து; மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் காட்டமாக தெரிவித்துள்ளார்.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டுக்கு பேராபத்து. அவரை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளார்.

தினகரன் கைதுக்கு எதிராக தமிழகம் முழுவதும் நாஞ்சில் சம்பத் கண்டன கூட்டங்கள் நடத்தி வருகிறார். அவர் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில்,

பேராபத்து

பேராபத்து

ரஜினி அரசியலுக்கு வருவது தமிழ் நட்டுக்கு பேராபத்து. அவர் அரசியலுக்கே வரக் கூடாது. போர் வரும்போது பார்ப்போம் என கூறுவதெல்லாம் பூச்சாண்டி காட்டுகிற வேலை. ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்தாலும் மக்கள் அவரை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.

அரசியல் அநாதைகள்

அரசியல் அநாதைகள்

பிரதமர் மோடியுடனான ஓபிஎஸ் சந்திப்பு குறித்த கேள்விக்கு, அரசியல் அநாதைகள் அரசன் காலடி பணிவார்கள்.. மக்களின் பிரச்சனையை பிரதமரிடம் கொண்டு செல்வதற்கு இவர் யார்?' எனவும் கேள்வி எழுப்பினார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் உங்கள் பங்கு என்ன என்றதற்கு,'வரும் மே 27-ந் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பட்டிமன்றம் நடக்கிறது. எம்ஜிஆரின் வானாளவிய புகழுக்குக் காரணம் சினிமா? அரசியலா? என நடக்கும் பட்டிமன்றத்தில் நடுவராகப் பங்கேற்கிறேன்' எனக் கூறினார்.

தினகரனுக்காக அணிதிரளும் தமிழகம்

தினகரனுக்காக அணிதிரளும் தமிழகம்

இன்றுள்ள அரசியல் சூழல் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு,'தமிழகம் தினகரனுக்காக அணி திரண்டு வருகிறது' எனக் கூறினர். தினகரனுக்கான நாஞ்சில் சம்பத்தின் நீதிகேட்கும் பயணம் தொடருகிறது!

English summary
Nanchil Sampath gave special interview to Oneindia and told that Rajini's entry into politics is great danger to Tamilnadu and people never accept Rajini, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X