தமிழக முதல்வர் நாற்காலியில் ரஜினி அமரப்போவது உறுதி ... சொல்வது தமிழருவி மணியன்
தமிழக முதல்வர் நாற்காலியில் ரஜினி அமரப்போவது உறுதி என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
வேலூர் : தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் ரஜினி அமரப்போவது உறுதி என்றும், தமிழகத்திற்கான நல்லாட்சியை ரஜினியால் தான் வழங்க முடியும் என்றும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சாவடி அருகேயுள்ள காந்தி பூங்கா மற்றும் காந்தி சிலையை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் தமிழருவி மணியன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தைக் கடந்த 50 ஆண்டுகளாக ஆண்ட திராவிடக்கட்சிகள் அழித்துவிட்டனர். தற்போதைய சூழலில் உடனடியாக அரசியல்மாற்றம் தேவைப்படுகிறது.
இந்த இரண்டு விஷயங்களையும் மனதில் வைத்துத்தான் ரஜினி அரசியலுக்கு வருகிறார். தமிழகத்தின் நிலை குறித்து எதாவது சொன்னால், உடனடியாக விமர்சனம் செய்யும் அரசியல்வாதிகள் கேள்விக்கு விளக்கம் சொல்லத் தயாராக இல்லை.
ஆனால் ரஜினியின் அரசியல் அவ்வாறு இருக்காது. மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்பது மட்டுமே அவரது நோக்கம். எனவே, அவரை முதல்வராக்கினால் ரஜினி நிச்சயம் மக்களுக்கான ஆட்சியைக் கொண்டு வருவார்.
நிச்சயம் தமிழகம் இந்தியாவிலேயே முன்மாதிரியான மாநிலமாக விளங்கும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும், தமிழக முதல்வர் நாற்காலியில் ரஜினி அமரப்போவது உறுதி. அதை வலியுறுத்தித்தான் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் கோவை மாநகரில் மே 20ம் தேதி மாநாடு நடக்க இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications