ரஜினிகாந்த் கர்நாடகாவில் சொத்துகள் எதனையும் வாங்கி குவிக்கவே இல்லை... சொல்கிறார் நண்பர் ராஜ்பகதூர்

நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகாவில் சொத்து வாங்கி குவிப்பதாகக் கூறுவது முற்றிலும் பொய் என்று அவரது நெருங்கிய நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு : நடிகர் ரஜினிகாந்த்திற்கு பெங்களூரில் இரண்டு இடம் தவிர வேறு சொத்தே கிடையாது என்று அவரின் நெருங்கிய நண்பர் ராஜ்பகதூர் கூறியுள்ளார்.

போருக்குத் தயாராகுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் சொன்னதின் அர்த்தம் தெரியாமல் சுற்றும் தொண்டர்களுக்கு அவரின் நெருங்கிய நண்பரான ராஜ் பகதூர் அளித்துள்ள விளக்கம் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச ரகசியங்களைப் போட்டு உடைத்துள்ளது. ஒவ்வொரு முறையும் படம் வெளியாகும் போது சொல்வது போல அல்ல ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று ராஜ் பகதூர் கூறியுள்ளார். இத்தனை நாட்கள் அரசியல் பயின்றி ரஜினி தற்போது அரசியல் தீர்க்கதரிசியாக மாறியுள்ளதால் அவர் அரசியலுக்கு வருவதும் நிச்சயம் என்று போட்டு உடைத்துள்ளார்.

தமிழ்நாட்டு உப்பை சாப்பிட்டு வளர்ந்த ரஜினி அங்கு தான் கோடிக்கோடியான பணத்தை சம்பாதித்து சூப்பர் ஸ்டார், பத்ம பூஷண் உள்ளிட்ட வெகுமானங்கள் பெற்றார். எனவே அவர் தமிழ்நாட்டு மக்களுக்காகவே அரசியலில் வர நினைப்பதாக கூறிய ராஜ்பகதூர் தற்போதைய சூழலில் தமிழக அரசியல்கெட்டுப் போயுள்ளதால் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப விரைவில் அரசியலில் அடியெடுத்து வைப்பார் என்றார்.

 காசு சம்பாதிக்க அல்ல

காசு சம்பாதிக்க அல்ல

ரஜினி தற்போது ரசிகர் மன்றம் மூலம் மக்களுக்கு உதவி செய்தாலும் முழு நேரமாக மக்கள் பணியாற்ற அரசியலுக்கு வருவதையே விரும்புவதாகவும் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் ராஜ்பகதூர் கூறியுள்ளார். ரஜினி அரசியலுக்கு வந்தால் ஒரு பைசா கூட சம்பாதிக்காமல் மக்கள் நலனில் மட்டுமே கவனம் செலுத்துவார் என்று ரஜினியே சொன்னதாக சிலாகிக்கிறார் ராஜ்பகதூர்.

 பெங்களூரில் சொத்தே கிடையாது

பெங்களூரில் சொத்தே கிடையாது

ரசிகர் மன்றங்கள் மூலம் ஏழைகளுக்கு உதவ முடியாது என்பதோடு ஊழல் பணத்தை பிடித்து மக்களுக்கு கொடுக்க ரஜினி அரசியலுக்குத் தேவை. ரஜினி தான் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை தமிழகத்தில்தான் முதலீடு செய்துள்ளார். அவர் பெங்களூரில் சொத்து வாங்கிக் குவித்திருக்கிறார் என்று சொல்வதெல்லாம் சுத்தப் பொய்.

 தமிழ்நாட்டில் தான் முதலீடுகள்

தமிழ்நாட்டில் தான் முதலீடுகள்

எனக்கு நன்றாகத் தெரியும் ரஜினி இங்கே வந்தால் தங்குவதற்கு இரண்டு இடம் மட்டுமே வாங்கி வைத்துள்ளார். மற்றபடி அவருடைய சொத்து எல்லாம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது, அதையும் அவர் நியாயமான முதலீடுகள் செய்துள்ளதால் பொது வாழ்க்கைக்கு அவர் எந்த அளவிற்கு தகுதியானவர் என்பதை இதன் மூலமே தெரிந்து கொள்ளலாம் என்கிறார் ராஜ் பகதூர்.

 அப்ப இல்லையா

அப்ப இல்லையா

ராஜ்பகதூர் பேட்டி மூலம் இது வரை ரஜினி தமிழ்நாட்டில் சம்பாதித்து கர்நாடகாவில் சொத்து வாங்கி குவிக்கிறார் என்று ஆண்டாண்ட காலமாக பாடப்படும் வசை மொழிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஜினி எப்போது அரசியல் கடலில் குதிக்கப் போகிறார் என்ற கேள்விக்கு மட்டும் கமா, ஆச்சரியக் குறிகளுடன் பதில் நீள்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+