தைலாபுரத்தில் ஒரு ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்.. உலகிலேயே மிகத் தூய்மையானது.. "ஆய்வு செய்த" ராமதாஸ்
திண்டிவனம்: தான் வசிக்கும் தைலாபுரம் தோட்டத்தில் மரங்கள் மூலம் ஆக்சிஜன் கிடைப்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் நான் வாழும் தைலாபுரம் தோட்ட வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தான் உலகின் தூய்மையான ஆக்சிஜன் ஆகும்.
இது விற்பனைக்கு அல்ல. இலவச வினியோகம் தான்.
அந்த ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை இன்று காலை சுமார் அரை மணி நேரம் ஆய்வு செய்தேன். அனைத்தும் மிகச்சரியாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

உற்பத்தி நிலையம்
நான் சொல்வது உங்களுக்கெல்லாம் நன்றாக புரியும் என்று நினைக்கிறேன். நாம் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜனை மரங்களும், தாவரங்களும் தான் தருகின்றன. எங்கள் தோட்டத்தில் ஓங்கி வளர்ந்துள்ள மரங்களையும், தாவரங்களையும் தான் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் என்று குறிப்பிட்டேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மக்கள்
இயற்கையோடு அவர் இணைந்திருக்கும் படங்களையும் பதிவு செய்துள்ளார். ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இயற்கையை காப்போம் என்ற அளவில் மரம் நடுதல், பிளாஸ்டிக்கை ஒழித்தல் உள்ளிட்ட செயல்களில் மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

தொழிற்சாலைகள்
அந்த வகையில் மரம் நடுவதன் அவசியத்தை டாக்டர் ராமதாஸ் சமூக பொறுப்புணர்வோடு பதிவிட்டுள்ளார். மரங்களை வெட்டி, காட்டை அழித்து வேலைவாய்ப்புகள் என்ற பெயரில் பல்வேறு தொழிற்சாலைகளை அமைப்பது தவறு என்பது இந்த கொரோனா நமக்கு உணர்த்திவிட்டது.

எதிர்பார்ப்பு
உலகெங்கும் பரவிக் கிடக்கும் தூய்மையான காற்று இல்லாமல் இந்த கொரோனாவின் இரண்டாவது அலையில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். இதன் பிறகாவது மரம் நடுதலையும் அதன் அவசியத்தையும் மக்கள் உணர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications