ஜவுளி கடையில் வேலை பார்த்ததால் காதலை உதாசீனப்படுத்திய சுவாதி... ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம்
நெல்லை: பொறியியல் படிப்பை முடிக்காமல் ஜவுளி கடையில் வேலை பார்த்ததால் என் காதலை சுவாதி உதாசீனப்படுத்தினார்... இந்த ஆத்திரத்தில் சுவாதியை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக கொலையாளி ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் பொறியாளர் சுவாதியை படுகொலை செய்த ராம்குமார் நெல்லையில் நேற்று இரவு சிக்கினார். அப்போது போலீசிடம் இருந்து தப்பிக்க பிளேடால் கழுத்தை அறுத்து ராம்குமார் தற்கொலைக்கு முயன்றார்.
இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ராம்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சிகிச்சையில் முன்னேற்றமடைந்த நிலையில் ராம்குமாரிடம் போலீசார் வாக்கு மூலம் பெற்றிருக்கின்றனர்.

ராம்குமார் வாக்குமூலம்
அதில் ராம்குமார் கூறியுள்ளதாவது:
நெல்லை அருகே உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்தேன். படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. சென்னை சூளைமேட்டில் தங்கி இருந்து ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தேன்.
பொறியியல் பட்டதாரி என அறிமுகம்
அப்போதுதான் சுவாதியின் அறிமுகம் கிடைத்தது. கடந்த 4 மாதங்களாக அவருடன் பழகி வந்தேன். நான் வேலைக்கு நடந்து செல்வது வழக்கம். அதே நேரத்தில் சுவாதியும் வேலைக்கு புறப்பட்டு வருவார். அப்போது இருவரும் பேசிக் கொள்வோம். சுவாதியிடம் நான் பொறியியல் பட்டதாரி என அறிமுகம் செய்து பழகி வந்தேன். நாளடைவில் நான் அவரை காதலிக்க தொடங்கினேன்.

ஜவுளி கடை வேலையால் உதாசீனம்
இந்நிலையில் நான் பொறியியல் படிப்பை முழுமையாக முடிக்கவில்லை என்பதும், ஜவுளிக்கடையில் வேலை செய்வதும் சுவாதிக்கு தெரியவந்தது.

காதலை ஏற்க மறுப்பு
இதனால் அவர் என்னிடம் பேசுவதை தவிர்த்தார். அவரிடம் சென்று எனது காதலை சொன்னேன். ஆனால் அவர் என்னை உதாசீனமாக பேசினார். தொடர்ந்து என்னை சந்திப்பதை தவிர்த்தார்.

கெஞ்சிப் பார்த்தேன்...
காலையில் வேலைக்கு செல்லும்போது அவரது தந்தையை ரயில் நிலையத்துக்கு அழைத்து வந்தார். அதனால் வழியில் அவரை சந்தித்து பேச முடியவில்லை. எனவே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சென்று 2 முறை அவரிடம் பேசினேன். அப்போது எனது காதலை ஏற்றுக்கொள்ளும் படி சுவாதியிடம் கெஞ்சினேன்.

2 நாட்களாக பின் தொடர்ந்தேன்...
ஆனால் அவர் உனக்கும், எனக்கும் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லை, பின்னர் ஏன் பின்னாடி சுற்றுகிறாய் என கூறி என்னை திட்டினார். இதனால் எனக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவரை கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டேன். எனது பேக்கில் புத்தகங்களுடன் அரிவாளை மறைத்து வைத்துக் கொண்டு 2 நாட்களாக சுவாதியை பின் தொடர்ந்தேன்.

சரமாரியாக வெட்டினேன்
கடந்த 24-ந் தேதி காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி ரயிலுக்கு காத்திருந்தபோது அவரிடம் சென்று மீண்டும் எனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சினேன். அப்போதும் அவர் மறுத்துவிட்டார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினேன்..
இவ்வாறு ராம்குமார் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications