ரேஷன் பணியாளர்கள் இன்று முதல் கடையடைப்பு போராட்டம்.. பொருட்கள் வழங்குவதில் சிரமம்..ஏன்? என்னாச்சு?
சென்னை: தமிழ்நாடு முழுவதும் ரேஷன் பணியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதன்படி இன்று ரேஷன் கடைகளை அடைத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் நியாயவிலைக்கடைகள் இயங்காமல் மூடப்பட உள்ளது.
தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவராக இருந்து வருபவர் ஜெயச்சந்திர ராஜா. இவரை சிலர் ஆயுதங்களால் தாக்கினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். வலது கை விரல்கள் துண்டாக வெட்டப்பட்டுள்ளன.

தற்போது ஜெயச்சந்திர ராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தான் ஜெயச்சந்திர ராஜாவை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இன்னும் போலீசார் கைது செய்யவில்லை.
ஏற்கனவே ஜெயச்சந்திர ராஜா மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தற்போது 2 வது முறையாக மர்மநபர்கள் அட்டாக் செய்துள்ளனர். இதனால் கொலை வெறி தாக்குதல் என தமிழ்நாடு அரசு நியாயவிலை சங்கத்தினர் கூறினர். திட்டமிட்டே மர்மநபர்கள் மீண்டும் மீண்டும் அவரை தாக்குவதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
இதற்கிடையே தான் இன்னும் கைது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ரேஷன் பணியாளர் சங்கத்தினர் காலவரையற்ற போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி இன்று முதல் போராட்டம் துவங்கப்பட உள்ளது. அதன்படி இன்று பணியாளர்கள் ரேஷன் கடையை மூடி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் ரேஷன் பொருட்களை மக்களுக்கு வழங்குவதில் பிரச்சனை உருவாக உள்ளது.

இதற்கிடையே தான் மாற்று பணியாளர்களை வைத்து ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் ஏற்படும் பிரச்சனையை சரிசெய்ய கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது. மேலும் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு No Work No Pay என்ற முறையில் சம்பளம் பிடித்த செய்ய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications