அணிகளை இணைக்க இன்னும் முகூர்த்த நாள் குறிக்கவில்லை - ஆர்.பி உதயகுமார்
ஓபிஎஸ் அணியுடனான பேச்சுவார்த்தை சாதகமாக நடைபெற்று வருகிறது. ஆனால் இணைப்பிற்கான முகூர்த்த நாள் இன்னும் குறிக்கவில்லை என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பதற்கான முகூர்த்த தேதி இன்னும் குறிக்கவில்லை என்று தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் அணிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. அவ்வப்போது முட்டுக்கட்டை ஏற்பட்டாலும், அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை ரகசியமாகவே நடந்து வருகிறது.

அணிகள் இணைப்பு
இந்த சூழ்நிலையில்தான் டிடிவி தினகரன் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அணிகளை இணைக்க அவசரமாக பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய அறிவிப்பு
இதனிடையே எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் புதிய அறிவிப்பை வெளியிடுகிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஓ.பி.எஸ் அணியுடன் இணைப்பு பேச்சுவாரத்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது என்றும் கூறியுள்ளார்.
Recommended Video


முகூர்த்த தேதி
அணிகள் இணைப்பதற்கான முகூர்த்த தேதி இன்னமும் குறிக்கவில்லை. தேதி குறித்த உடன் அது பற்றி அனைவருக்கும் தெரிவிக்கப்படும். அணிகள் விரைவில் இணையும் என்ற நம்பிக்கையிருக்கிறது.

குழம்பிய குட்டையில் மீன்
நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசை காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சித்து வருகிறார் என்று கூறியுள்ள உதயகுமார், ஜெயலலிதா இல்லாத நிலையில் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பவர்களில் நடிகர் கமலும் ஒருவர் என்று தெரிவித்தார்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications