லோக்சபா தேர்தல்: யாருக்கு எந்த தொகுதி… திமுகவில் திக் திக்…

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலுக்காக தமிழ்நாடு, புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் திமுகவில் ஒருவழியாக நேர்காணல் முடிந்துவிட்டது.

வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வரும் நிலையில் யாருக்கு எந்த தொகுதி கிடைக்குமோ என்று விருப்பமனு தாக்கல் செய்த 900 பேரும் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

திமுகவுடன் இந்தமுறை விடுதலைசிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளனர்.

திமுகவில் கூட்டணி கட்சியினருடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் திமுகவில் நிலவும் திக்... திக்... நிலவரம் பற்றி சிறிய ரவுண்ட் அப்.

மா.சு – குஷ்பு போட்டி

மா.சு – குஷ்பு போட்டி

தென் சென்னையில் மா.சுப்பிரமணியம் பெயர் உறுதியாகிவிட்டதாம். ஆனால், குஷ்புவை நிறுத்துவதில் கருணாநிதி முடிவாக இருக்கிறாராம். இதனால் தலைவர், பொருளாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர்.

தயாநிதி மாறன்

தயாநிதி மாறன்

மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட மீண்டும் விருப்பம் தெரிவித்து நேர்காணலில் பங்கேற்றுள்ளார் தயாநிதிமாறன். இவர் ஏற்கனவே இதே தொகுதியில் இரண்டுமுறை போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். மூன்றாவது முறையாக மத்திய சென்னை தொகுதி தயாநிதி மாறனுக்கு கிடைக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம் என்கின்றனர்.

தஞ்சாவூரில் டி.ஆர் பாலு

தஞ்சாவூரில் டி.ஆர் பாலு

தஞ்சாவூரைக் குறிவைத்து இருக்கிறார் டி.ஆர்.பாலு அவருக்கு கட்சி நிர்வாகிகள் ஆதரவு இல்லை என்று நினைக்கிறாராம் கருணாநிதி. அதேசமயம் அரக்கோணம் தொகுதி அநேகமாக திருத்தணி ஈஸ்வரப்பனுக்கு போக​லாம் என்கிறார்கள்.

வி.சிக்கு சிக்குமா விழுப்புரம்

வி.சிக்கு சிக்குமா விழுப்புரம்

.விழுப்புரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கேட்கிறது. ஆனால், தி.மு.க-தான் நிற்க வேண்டும் என்று பொன்முடி சொல்கிறாராம். வேட்பாளராக புஷ்பராஜை நிறுத்த தலைமை நினைப்பதாகவும், டாக்டர் முத்தையன் என்பவரை நிறுத்த பொன்முடி நினைப்பதாகவும் சொல்கிறார்கள்.

திருச்சியில் யார்?

திருச்சியில் யார்?

திருச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் குமார் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார். ஆனால், இன்னொரு முக்கியக் கட்சியான திமுக-வில் திருச்சிக்கு யார் வேட்பாளர் என்பதில் இன்னமும் தெளிவு பிறக்கவில்லை.

திருச்சி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக-வில் முன்னாள் அமைச்சர்கள் ரகுபதி, செல்வராஜ், திருவெறும்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன், இளைஞரணி ஆனந்த், மாநகரச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டவர்கள் மனு அளித்துள்ளனர்.

நேருவின் ஆதரவாளருக்கு

நேருவின் ஆதரவாளருக்கு

நேருவின் ஆதரவாளரான ஆனந்த் நேர்காணலுக்கே செல்ல வில்லை, காரணம், ‘நாடாளுமன்றத் தேர்தலில் செலவளிக்கும் அளவுக்கு தம்மிடம் வசதி இல்லை' என்று சொல்லி இருக்கிறார் ஆனந்த்.

திருச்சி தொகுதியில் முக்குலத்தோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கடந்த முறை குமார் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம். இந்தமுறை குமாரை வீழ்த்த வேண்டுமானால் திமுக-வும் முக்குலத்தோர் ஒருவரை களமிறக்க வேண்டும் என மாவட்டத் தலைமை யோசிக்கிறது.

திருச்சியில் பழனிமாணிக்கம்

திருச்சியில் பழனிமாணிக்கம்

இது ஒருபுறமிருக்க, முக்குலத் தோரும் தஞ்சை தொகுதிஎம்.பி-யுமான பழநிமாணிக்கத்தை திருச்சியில் நிறுத்துவது குறித்து திமுக தலைமையில் ஆலோசிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், இதையும் நேரு அவ்வளவாய் விரும்பவில்லை என்கின்றனர்.

நேருவின் முட்டுக்கட்டை

நேருவின் முட்டுக்கட்டை

காரணம் ஐந்து முறை எம்.பி. முன்னாள் மத்திய அமைச்சர் இந்த அடையாளங்களைக் கொண்ட பழநிமாணிக்கம் திருச்சிக்கு வந்தால் தன்னை மிஞ்சி விடுவார் என்று அச்சப்படுகிறார் நேரு. திமுக-வில் வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளரின் பரிந்துரையையும் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படும்.

எனவே நேருவின் விருப்பத்துக்கு மாறாக திருச்சி திமுக-வில் எதையும் திணிக்க நினைக்காது தலைமை என்கிறார்கள் திருச்சி திமுக பிரமுகர்கள்.

வாரிசுகளுக்கு நோ

வாரிசுகளுக்கு நோ

தூத்துக்குடி பெரியசாமி மகன் ஜெகன், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், பொங்கலூர் பழனிசாமி மகன் பைந்தமிழ் பாரி ஆகிய வாரிசுகள், வேலூர், தூத்துக்குடி, பொள்ளாட்சி தொகுதிகளைக் குறிவைக்கிறார்கள். 'இந்த தடவை வாரிசுகளுக்கு தருவதைப் பற்றி யோசிக்கலாமே' என்று கருணாநிதி சொல்லியிருக்கிறாராம்.

ராமநாதபுரத்தில் இழுபறி

ராமநாதபுரத்தில் இழுபறி

ராமநாதபுரம் திமுக-வில் ஜே.கே.ரித்தீஷ் எம்.பி.க்கும் மாவட்டச் செயலாளர் சுப.தங்கவேலனுக்கும் இடையில் அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது. இவர்களை சமாளிப்பதற்காக இந்த முறை ராமநாதபுரம் தொகுதியைக் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிவிட திமுக தலைமை ஆலோசனை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கடந்த முறை திமுக கூட்டணி யில் வேலூர் தொகுதியில் நின்று வெற்றிபெற்றது.

இந்தமுறை வேலூரில் துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்தை நிறுத்த பிரயாசைப்படுகிறார். அவருக்காக 150 பேருக்கும் மேல் விருப்ப மனுவும் கொடுத்திருக்கிறார்கள். ஒருவேளை வேலூரில் கதிர் ஆன்ந்த் நிறுத்தப்பட்டால் ராமநாதபுரம் தொகுதி முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்படும். இதுகுறித்து தலைமையில் ஏற்கெனவே ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். அதேசமயம் ராமநாதபுரம் தொகுதியில் சுப.தங்கவேலன் தனது மகனுக்கு சீட் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளாராம்.

ஜே.கே.ரித்தீஷ் – நெப்போலியன்

ஜே.கே.ரித்தீஷ் – நெப்போலியன்

திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் மத்தியஅமைச்சர் மு.க.அழகிரிக்கு ஆதரவாக ராமநாதபுரம் தொகுதி எம்.பி ஜே.கே.ரித்தீஷ், பெரம்பலூர் தொகுதி எம்.பி நெப்போலியன் ஆகியோர் இந்த முறை போட்டியிட விரும்பவில்லை என்று தெரிகிறது.

உயிரை கொடுப்பேன்

உயிரை கொடுப்பேன்

இந்த முறை தேர்தலில் போட்டியிட விரும்பாதது குறித்து ரித்தீஷ் எம்.பி.யிடம் கேட்டதற்கு, "நான் பதவிக்காக அலைபவன் அல்ல. நமக்கு சீட் கொடுத்து அங்கீகரித்த கட்சியை உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என நினைப்பவன் என்று கூறியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தகுதியான நபர்களை கட்சிப் பதவிகளில் அமர்த்தும் வரை தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்திருக்கிறேன். அதனால் நான் விருப்ப மனு கொடுக்க வில்லை'' என்று கூறியுள்ளார்.

பொள்ளாச்சியில் பொங்கலூர் பழனிச்சாமி

பொள்ளாச்சியில் பொங்கலூர் பழனிச்சாமி

பொள்ளாச்சி தொகுதிக்கு திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி அவரது மகன் பைந்தமிழ்பாரி, மருமகன் டாக்டர் கோகுல் உள்ளிட்டவர்கள் விருப்ப மனு அளித்திருந்தனர். இந்த மூவரில் பொங்கலூர் பழனிச்சாமிதான் வேட்பாளர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

பணியை தொடங்கிய பழனிச்சாமி

பணியை தொடங்கிய பழனிச்சாமி

பொங்கலூர் பழனிச்சாமி குடும்பத்தில் அவரது மருமகன் டாக்டர் கோகுலுக்குத்தான் இந்த முறை பொள்ளாச்சி தொகுதி என பரவலாகப் பேசப்பட்ட நிலையில், மருமகனை சமாதானப்படுத்தி ஒரு வழியாக போட்டியிலிருந்து ஒதுங்க வைத்திருக்கிறார் பொங்கலூர் பழனிச்சாமி.

தலைவரின் கட்டளை

தலைவரின் கட்டளை

இது குறித்து கருத்து கூறியுள்ள பழனிச்சாமி,"பொள்ளாச்சி தொகுதிக்கு நான் சீட் கேட்கவில்லை. மகன் பைந்தமிழ்தான் கேட்டிருந்தார். ஆனால், ‘சில காரணங்களால் வாரிசுக்கு சீட் கொடுக்க முடி்யாது. நீயே போய் வேலை செய். உனக்கு நல்லபேர் இருக்கிறது; ஜெயிச்சுட்டு வருவே'ன்னு தலைவர் சொல்லி விட்டார்.

தலைவரே சொன்ன பிறகு என்ன இருக்கிறது. அதுதான் தேர்தல் வேலைகளைத் தொடங்கி விட்டேன். தலைவர் சொன்னபடி வெற்றியை அவரது காலடியில் சமர்ப்பிப்பேன் என்று கூறியுள்ளார்.

மயிலாடுதுறையில் மமக

மயிலாடுதுறையில் மமக

மனிதநேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதியை ஒதுக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எனவே, கூட்டணியில் மாற்றம் இல்லாதவரை இதில் எந்த மாற்றமும் இருக்காது'' என்று சொன்னார்.

யாருக்கு எந்த தொகுதி

யாருக்கு எந்த தொகுதி

திமுகவின் 900 வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சியினரின் நெருக்கடி என பரபரப்பாக உள்ள திமுகவில் யாருக்கு எந்த தொகுதி கிடைக்குமோ என்ற திக்.... திக்.. சூழல் விருப்பமனு கொடுத்த அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது என்றே கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+