ஆர்.கே. நகரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் யார்? - ஸ்டாலின் இன்று நேர்காணல்
ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று நேர்காணல் நடத்துகிறார்.வேட்பாளர் யார் என்பது இன்று மாலை தெரியும்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான நேர்காணல் இன்று மாலை நடக்கிறது. தொடர்ந்து இரவில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு காலியாக உள்ள ஆர் கே நகர் சட்டசபைத் தொகுதியில் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இடைத்தேர்தல் களம் படுபரப்படைந்துள்ளது.
அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி இரண்டு பக்கம் பிரிந்துள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் போட்டியிடப்போவதாக கூறியுள்ளார்.

திமுக விருப்பமனு
திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் விருப்பமனுக்கள் பெறப்பட்டன. நேற்றுடன் விருப்பமனுக்கள் பெறும் நாள் நிறைவடைந்தது. 25 ஆயிரம் ரூபாய் கட்டி விருப்பமனு அளித்துள்ளனர்.

20 பேர் போட்டியிட விருப்பம்
தேர்தலில் ஏற்கனவே ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த திமுக மகளிர் அணி பிரசாரக்குழு செயலாளர் சிம்லா முத்துசோழன், சுந்தர்ராஜன், சுவிஸ் ராஜன், மயூரி, ஏ.டி.மணி, ரோஸ் பொன்னையன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

திமுக வேட்பாளர் யார்?
இவர்களுக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணி நடக்கிறது. மு.க.ஸ்டாலின் நேர்காணலை நடத்துகிறார். இதில் வேட்பாளர் உறுதி செய்யப்படுவார். அதைத் தொடர்ந்து இன்று இரவோ அல்லது நாளையோ ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்.

திமுக வியூகம்
அதிமுக பிளவுபட்டுள்ளதால் ஆர் கே நகரை வென்றே ஆக வேண்டும் என்று திமுக வியூகம் வகுத்துள்ளது. எனவே வலுவான வேட்பாளரை அறிவித்து இடைத்தேர்தலில் வெல்ல திட்டம் தீட்டியுள்ளது திமுக. திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் இறங்க உள்ளார். மாநிலம் முழுவதும் இருந்து மாவட்ட செயலாளர்களை ஆர் கே நகரில் களமிறக்க திமுக திட்டம் தீட்டியுள்ளது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications