கோவை மாநகர போக்குவரத்தின் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி-ஏராளமானோர் பங்கேற்பு
சாலைபாதுகாப்பை வலியுறுத்தி கோவையில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
கோவை: சாலை பாதுகாப்பை வலியுறுத்தி கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
29-வது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இம்மாதம் 23-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் இரு சக்கர வாகன பணிமனை தொழிற்சங்கம், ஸ்ரீ ரமண மகரிஷி ட்ரஸ்ட் சார்பாக, சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

வடகோவையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் இந்த பேரணி துவங்கியது. இதனை கோவை மாநகர போக்குவரத்து இணை ஆணையர் சுஜித்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், காவல்துறையினர், தன்னார்வலர்கள் என நூற்றூக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வட கோவை சாலையில் துவங்கிய இந்த பேரணி ராலி ரோடு உழவர் சந்தையில் முடிவடைந்தது.
பேரணியில், சாலை விதிகளை மதிப்போம், தலை கவசம் அணிய வேண்டும், குடி போதையில் வாகனத்தை இயக்க கூடாது, உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தி செல்லப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications