கோவை அருகே 2 பி.இ. மாணவர்களிடம் இருந்து ரூ.70 லட்சம் ரொக்கம் கொள்ளை: ஹவாலா பணமா?
கோவை: கோவை அருகே காரில் சென்ற 2 கல்லூரி மாணவர்களிடம் இருந்து ரூ. 70 லட்சத்தை 10 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் என்பவரின் மகன் முகமது ரஷீத்(21). அதே பகுதியைச் சேர்ந்தவர் அவரது நண்பர் முகமது ரியாஸ்(20). அவர்கள் இருவரும் கோழிக்கோட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் ஏரோனாட்டிக்கல் என்ஜினியரிங் படித்து வருகிறார்கள்.

ரஷீத் மற்றும் ரியாஸ் ஆகியோர் கடந்த சனிக்கிழமை சேலம் வந்து ஒருவரிடம் ரூ. 70 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு காரில் ஊருக்கு திரும்பினர். இரவு 11.45 மணிக்கு அவர்களின் கார் கோவை அருகில் உள்ள தென்னம்பாளையம் பக்கம் செல்கையில் இன்னோவா கார் ஒன்று அவர்களின் காரை வழிமறித்தது. இன்னோவா காரில் இருந்து இறங்கிய 10 பேர் மாணவர்களை காரில் இருந்து வெளியே பிடித்து இழுத்து தாக்கிவிட்டு பணத்துடன் காரை எடுத்துச் சென்றனர்.
இது குறித்து மாணவர்கள் கோவை போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து அனைத்து வாகன சோதனைச்சாவடிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதற்கிடையே அவர்களின் கார் பல்லடம் அருகே நின்று கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரஷீத் போலீசில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். முதலில் தனது பர்ஸில் இருந்த ரூ. 5 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பின்னர் ரூ.70 லட்சம் கொள்ளை போனதாக தெரிவித்துள்ளார்.
அவ்வளவு பணம் உங்களிடம் எப்படி வந்தது என்று போலீசார் கேட்டதற்கு ரஷீத் கூறுகையில், கேரளாவில் என் தந்தை கல் குவாரி வைத்துள்ளார். அவர் தான் சேலத்தில் உள்ள ஒருவரிடம் ரூ. 70 லட்சத்தை வாங்கி வருமாறு கூறினார் என்றார்.
ரஷீத் பணத்துடன் வருவது தெரிந்த ஏதோ ஒரு கும்பல் தான் அதை கொள்ளையடித்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் இந்த பணம் ஹவாலா பணமாக இருக்கக்கூடுமோ என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது.
கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சேலம் - கோவை வழித்தடத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருக்கும் சிசிடிவி கேமராக்களில்பதிவானவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications