'அதே அறையில் ஓபிஎஸ்'.. துணை முதல்வருக்கு தலைமைச் செயலகத்தில் அறை ஒதுக்கீடு
துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு, அவர் ஏற்கெனவே முதல்வராக இருந்தபோது பயன்படுத்திய அதே அறை இப்போதும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: அதிமுக அணிகள் இணைப்புக்குப் பிறகு நேற்று, துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள பன்னீர்செல்வத்திற்கு, ஏற்கனவே அவர் முதல்வராக இருந்த போது பயன்படுத்திய அறையே இப்போதும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில், நிதி அமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் இருந்தார். அப்போது அவருக்கு, தலைமைச் செயலகத்தில் முதல் தளத்தில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழக முதல்வராக ஓபிஎஸ் இருந்தபோதும், அதே அறையை அவர் பயன்படுத்தினார். அப்போது அவருக்கு ஜெயலலிதா பயன்படுத்திய சிஎம் சேம்பர் அறையைப் பயன்படுத்த சசிகலா தரப்பு அனுமதிக் கொடுக்கவில்லை என்று விமர்சனம் எழுந்தது.
பின்னர், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்போது, ஓபிஎஸ் பயன்படுத்திய அந்த அறை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள பன்னீர் செல்வத்திற்கு, மீண்டும் அதே அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில், நேற்று பன்னீர்செல்வம் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார்.
அவருக்கு, முதல்வர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் செங்கோட்டையனுக்கு அதே தளத்தில் வேறு அறையும், புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பாண்டியராஜனுக்கு மூன்றாவது தளத்தில் உள்ள அறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications