சோ இருந்திருந்தால் தமிழகம் அசிங்கப்பட்டிருக்காதாம்.. சொல்வது எஸ்.வி.சேகர்!!!!!
சோ இருந்திருந்தால் தமிழகம் அசிங்கப்படாமல் தடுத்திருப்பார் என்று காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: பாரத பிரதமரால் ராஜகுரு என அழைக்கப்பட்ட துக்ளக் சோ இருந்திருந்தால் தமிழகம் அசிங்கப்பட விட்டிருக்கமாட்டார் என்று காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சோ ராமசாமி, தமிழக அளவில் மட்டுமல்லாது தேசிய அளவிலான அரசியலை அலசி ஆராய்ந்தவர். அவர் துக்ளக் பத்திரிகையில் எழுதும் கட்டுரைகளுக்கு ஏற்ப தேர்தல் முடிவுகள் பிரதிபலித்ததையும் யாராலும் மறுக்க முடியாது.

ஜெயலலிதாவின் நண்பரும், நம்பிக்கைக்குரியவராக இருந்த சோ, ஜெயலலிதா இறந்த அடுத்த நாளே யாரும் எதிர்பாராத வகையில் மரணத்தைச் சந்தித்தார். இவர் இறந்தும் ஒரு வருடம் முடியப் போவதால் எஸ்.வி.சேகர் இவரைப் பற்றி ஒன்றைக் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களாக எஸ்.வி.சேகர் கந்து வட்டி, அதிமுக பிரச்சினை, இரட்டை இலை விவகாரம் என பல்வேறு விஷயங்களில் தனது அரசியல் கருத்துகளை டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் "சோ இருந்திருந்தால் தமிழகம் அசிங்கப்பட்டிருக்காது" என்று ஒரு தினுசான கருத்தைக் கூறியுள்ளார் எஸ்.வி.சேகர்.
நம் பாரதப்பிரதமர் மோடி அவர்களை சென்னையில் மிகச்சிறப்பாக அறிமுகப்படுத்திய என் மானசீக குரு சோ. நம் பிரதமர் மோடி அவர்கள் மனதார ராஜகுரு என அழைக்கப்பட்டவர் துக்ளக் சோ மட்டுமே. அவர் இருந்திருந்தால் தமிழகம் அசிங்கப்படாமல் தடுத்திருப்பார். I MISS U CHO sir. https://t.co/tS4ezeOrGX pic.twitter.com/GUV8ekUcxF
— S.VE.SHEKHER (@SVESHEKHER) November 28, 2017
அவர் போட்டுள்ள டிவீட்டில், நம் பாரதப்பிரதமர் மோடி அவர்களை சென்னையில் மிகச்சிறப்பாக அறிமுகப்படுத்திய என் மானசீக குரு சோ. நம் பிரதமர் மோடி அவர்கள் மனதார ராஜகுரு என அழைக்கப்பட்டவர் துக்ளக் சோ மட்டுமே. அவர் இருந்திருந்தால் தமிழகம் அசிங்கப்படாமல் தடுத்திருப்பார். I MISS U CHO sir என்று குறிப்பிட்டுள்ளார்.
அதெப்படி அசிங்கப்படாமல் சோ காப்பாத்தியிருப்பார்???
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications