உங்களைவிட்டு விலகிய எனக்கு எதுக்கு அமைப்பு செயலர் பதவி- போயஸுக்கு போன்போட்ட சைதை துரைசாமி
அதிமுக அமைப்புச் செயலராக தம்மை சசிகலா நியமித்ததை சைதை துரைசாமி விரும்பவில்லை என கூறப்படுகிறது.
சென்னை: அதிமுக அமைப்புச் செயலராக தம்மை திடீரென சசிகலா நியமித்ததில் முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியும் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம்.
சசிகலாதான் அதிமுக பொதுச்செயலராக வேண்டும் என முதலில் நேரில் சென்று கெஞ்சியவர்களில் சைதை துரைசாமியும் ஒருவர். ஆனால் சைதை துரைசாமியை மன்னார்குடி கோஷ்டி நம்பவே இல்லையாம்.

இதனால் போயஸ் கார்டன் பக்கமே வரக்கூடாது எனவும் சைதை துரைசாமிக்கு உத்தரவு போட்டதாம் மன்னார்குடி கோஷ்டி. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த்தை அடிக்கடி சந்தித்து நீங்க அரசியலுக்கு வரவேண்டும் என சைதை துரைசாமி வலியுறுத்தினாராம்.
சைதை துரைசாமி தங்களை விட்டு அதிகமாக விலகிப் போவதை நடராஜன் விரும்பவில்லையாம். அதனால் அவருக்கு ஒரு பதவியை கொடுத்து நம்மோடு இருக்கிறார்னு காட்டலாம் என ஐடியா கொடுத்திருக்கிறார். இதன்படிதான் அமைப்புச் செயலர்களில் ஒருவராக சைதை துரைசாமியும் நியமிக்கப்பட்டாராம்.
இந்த அறிவிப்பு வெளியான உடனேயே போயஸ் கார்டனுக்கு போனடித்த சைதை துரைசாமி, என்னைத்தான் வரவேண்டாம்னு சொல்லிட்டீங்களே.. அப்புறம் ஏன் இப்ப அமைப்புச் செயலர் பதவி? நானா கேட்டேன்? என கோபத்துடன் கொந்தளித்திருக்கிறார். செங்கோட்டையன், சைதை துரைசாமி என அடுத்தடுத்து பலரும் அமைப்புச் செயலர் பதவி வேண்டாம் என தூக்கி எறிவதால் மன்னார்குடி கோஷ்டி அதிர்ந்து கிடக்கிறதாம்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications