சேலத்தில் விபத்தில் சிக்கி வாலிபர் மரணம்- போலீசை தாக்கி வாகனத்தை தீ வைத்து எரித்த மக்கள்
சேலம் அருகே சின்னப்பம்பட்டியில் போலீஸ் வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாகனச் சோதனையின் போது தப்பியோட முயன்ற சரவணன் என்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார். சரவணனின் உயிரிழப்பை கண்ட
சேலம்: சங்ககிரி வட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள இடங்கணசாலை கிராமம், கோனேரிபட்டியை சேர்ந்தவர் சரவணன், 22. விசைத்தறி நெசவுத்தொழிலாளியான இவர், நேற்று சில தினங்களுக்கு முன்னர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இளம்பிள்ளையிலிருந்து, சின்னப்பம்பட்டி செல்லும் வழியிலுள்ள கூட்டத்து புளியமரம் பகுதியில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு, சரவணன் வந்தபோது, போலீசார் கையை காட்டி பைக்கை ஓரமாக கொண்டு வந்து நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். போலீசாரை பார்த்து பயந்த சரவணன் அப்படியே திருப்பிக்கொண்டு வந்த வழியாகவே செல்ல முயன்றார். எதிர்பாராத விதமாக ஜல்லி லோடு ஏற்றி வந்த மினி டெம்போ வேன், சரவணன் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சரவணன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், அந்த இடத்தில் இருந்த போலீசாரை தாக்கினர். இதையறிந்து, மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் ராஜாரணவீரன், சம்பவ இடத்திற்கு சென்றார். அவரையும் பொதுமக்கள் தாக்கினர். படுகாயம் அடைந்த ஆய்வாளர் ராஜாரணவீரன், தனியார் மருத்துவமனையிலும், எஸ்.எஸ்.ஐ பழனிச்சாமி, இடைப்பாடி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கி இருந்த மகுடஞ்சாவடி போலீசாரின் இரு மோட்டார் பைக்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தால், போலீசார், பொதுமக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். வஜ்ரா வாகனம் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசி, தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர்.
பின்னர், இறந்த சரவணன் உடலை எடுக்க விடாமல், பொதுமக்கள் தொடர்ந்து அடம் பிடிவாதமாக நின்றுகொண்டு போராட்டம் நடத்தியதால், சேலம் போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், சேலம் டி.ஐ.ஜி., நாகராஜன், எஸ்.பி., இராஜன், சங்ககிரி ஆர்டிஓ ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மக்களை அப்புறப்படுத்தி விட்டு விபத்துக்குள்ளான வாகனத்தையும், சரவணனின் உடலையும் மினி ஆட்டோவில் ஏற்ற முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களையும் சடலத்தை மினி ஆட்டோவில் ஏற்றக்கூடாது. ஆம்புலன்ஸ் வாகனத்தில் தான் ஏற்ற வேண்டும் என, பொதுமக்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போலீஸ் அதிவிரைவு வாகனத்தில், சரவணனின் உடலை ஏற்றி, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பொதுமக்கள் போராட்டம் காரணமாக சரவணனின் சொந்த ஊரில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர், பதற்றம் அதிகரித்துள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications