அப்பல்லோவில் ஜெ. ஒரே நாளில் 3 ஸ்வீட் சாப்பிட்டது உண்மைதான்.. ஏன் தெரியுமா? சசி வழக்கறிஞர் விளக்கம்
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று வகை இனிப்புகள் சாப்பிட்டது உண்மைதான் என சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று வகை இனிப்புகள் சாப்பிட்டது உண்மைதான் என சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள், சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் என விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.
நாள்தோறும் அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என அனைவரும் ஆறுமுகசாமி கமிஷனில் ஆஜராகி வருகின்றனர். அவர்களிடம் ஆறுமுகசாமி கமிஷன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

குறுக்கு விசாரணை
இந்நிலையில் அப்பல்லோ மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால் இன்று ஆறுமுகசாமி கமிஷனில் ஆஜரானார். அவரிடம் சசிகலா தரப்பின் வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

இனி சாப்பிட்டது உண்மைதான்
இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்திதாளில் வெளிவந்த தகவலின்படி ஜெயலலிதா மருத்துவமனையில் இனிப்பு சாப்பிட்டது உண்மை தான் என்றார்.

வெற்றியை கொண்டாட இனிப்பு
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த சந்தோஷத்தை கொண்டாடும் வகையில் ஜெயலலிதா மூன்று வகையான இனிப்புகளை உட்கொண்டார் என தெரிவித்தார்.

ஊடகங்களில் வெளியான காட்சிகள்
சாதாரண மனிதருக்கு எவ்வளவு கலோரிகள் இனிப்பு தேவையோ அந்த அளவுக்குதான் ஜெயலலிதா இனிப்புகளை எடுத்துக்கொண்டார் என்றும் அவர் கூறினார். அப்பல்லோ மருத்துவமனை என ஊடகங்களில் வெளியான காட்சிகள் உண்மைதான் என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications