இதென்ன கலாட்டா? ஓபிஎஸ்-க்கு போன்போட்டு கலகக் குரலை தீவிரமாக்க அட்வைஸ் செய்தார் நடராஜன்?
தினகரன் மீதான அதிருப்தியால் மாஜி முதல்வர் ஓபிஎஸ்-க்கு போனடித்து கலகக் குரலை தீவிரப்படுத்துமாறு சசி கணவர் நடராஜன் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சசிகலாவின் கணவர் நடராஜன் போனடித்து இன்னும் தீவிரமாக செயல்படுங்கள் என உசுப்பேற்றிவிட்டதாக ஒரு தகவல் தீயாக பரவுகிறது.
அதிமுகவில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் ஆதிக்கத்துக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி அணிதிரட்டி வருகிறார் ஓபிஎஸ். இதற்காக தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களை சந்திக்கும் பயணத்தையும் ஓபிஎஸ் தொடங்கியுள்ளார்.
சசிகலா தற்போது சிறையில் இருக்கும் சூழ்நிலையில் அவரது சகோதரி மகன் டிடிவி தினகரன் அதிமுகவையும் ஆட்சியையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார். தினகரனுடன் டாக்டர் வெங்கடேஷூம் கை கோர்த்துள்ளார்.

ஜீரணிக்க முடியாத நடராஜன்
இதுதான் சசிகலா குடும்பத்தில் பெரும் புகைச்சலை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜெயலலிதா புதைக்கப்பட்ட இடத்திலேயே அதிமுகவின் எதிர்காலம் பற்றி பேசிய சசிகலாவின் கணவர் நடராஜனால் இதை ஜீரணிக்க முடியவில்லையாம்.

ஓபிஎஸ்-க்கு போன்
இதேநிலையில்தான் சசிகலாவின் தம்பி திவாகரனும் இருந்து வருகிறாராம். இந்த நிலையில்தான் ஓபிஎஸ்-க்கு நடராஜனிடம் இருந்து போன் போயுள்ளது.

உசுப்பேற்றல்
இதை சற்றும் எதிர்பார்க்காத ஓபிஎஸ் தரப்பு மகிழ்ச்சியடைந்துள்ளதாம். ஓபிஎஸ்-க்கு போனடித்த நடராஜன், ஜெயலலிதா பெயரை பயன்படுத்தி நீங்கள் செய்யும் பிரசார வேகம் போதாது; தீவிரமாக செயல்படுங்கள் என உசுப்பேற்றியிருக்கிறார்.

தீபா வேண்டாம்
மேலும் தீபாவை உங்களுடன் இணைத்துக் கொள்வது உங்கள் இமேஜை பாதிக்கும்; அவருக்கு அழைப்புவிடுத்துக் கொண்டே ஒதுக்கி வைக்கும் பணியையும் செய்யுங்கள் என்றெல்லாம் அட்வைஸ் செய்திருக்கிறாராம் நடராஜன்.

சொதப்பல் இதனால்தானாம்
சசிகலா குடும்பத்தினரை எதிர்ப்பதாக கூறி மக்களை நம்ப வைக்கும் ஓபிஎஸ், நடராஜனின் இந்த போன் அட்வைஸையும் ஆர்வமுடன் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால்தான் 'வரலாற்று திருப்பம்' ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்ட நேற்றைய பிரஸ் மீட்டில் படுசொதப்பலை வெளிப்படுத்தினாராம் ஓபிஎஸ் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications