7 தமிழர் விடுதலைக்கு எதிரான மத்திய அரசின் வழக்கு மீதான விசாரணை ஆக.8-க்கு ஒத்திவைப்பு
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மத்திய அரசின் வழக்கு மீதான விசாரணை வரும் 8-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1991-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு பலியானார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி ஆகியோருக்கு தூகு தண்டனையும், ராபட்பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு இருந்தது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனு மீது ஜனாதிபதி முடிவெடுக்க 11 ஆண்டுகாலம் தாமதம் ஏற்பட்டதையடுத்த தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் மத்திய அரசு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இவ்வழக்கில் சிபிஐ விசாரித்த வழக்குகளில் ஆயுள் தண்டனைகளைக் கைதிகளை மாநில அரசு விடுவிப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை என தீர்ப்பளிக்கப்பட்டது. அதே நேரத்தில் அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக இன்று விசாரணை நடைபெற இருந்தது. இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்தது. அதில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மாநில அரசின் உரிமையை பறிப்பதாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இன்று உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக 7 தமிழர் விடுதலைக்கான மத்திய அரசின் வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது. பின்னர் வழக்கின் விசாரணை வரும் 8-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழக அரசின் சீராய்வு மனு மீதும் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications