உடுமலை அருகே பலாத்காரம் செய்து பள்ளி மாணவி கொலை!
திருப்பூர்: உடுமலை அருகே பிளஸ் 2 மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பக்கத்து வீட்டு வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த கோட்டமங்கலம், வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்தவர் தங்கவேல். விவசாயி. இவரது மகள் புஷ்பலட்சுமி, உடுமலை, பெதப்பம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் அருண்குமார் (28). பொள்ளாச்சியில் தன்னார்வ நிறுவனம் ஒன்றில் களப்பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
அருண்குமார், அடிக்கடி புஷ்பலட்சுமி வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு தங்கவேல், அவரது மனைவி ராசாத்தி ஆகியோர் வெளியே சென்றிருந்தபோது அருண்குமார் அங்கு வந்துள்ளார். வீட்டில் புஷ்பலட்சுமி, அவரது தாத்தா, பாட்டி மட்டும் இருந்துள்ளனர்.
தாத்தா, பாட்டி வெளியே அமர்ந்திருக்க வீட்டுக்குள் சென்ற அருண்குமார், கதவை உள்புறமாக பூட்டிவிட்டு, புஷ்பலதாவை பலாத்காரம் செய்துள்ளார். அப்போது வீட்டிற்குள் இருந்து சத்தம் வந்ததால் அங்கிருந்தவர்கள் வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளனர். உள்ளே இருந்து அருண்குமார், பதற்றத்துடன் வெளியே வந்திருக்கிறார். வீட்டிற்குள் புஷ்பலட்சுமி அரை நிர்வாண கோலத்தில் மயங்கி கிடந்தார்.
இதையடுத்து, புஷ்பலதாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த உறவினர்கள், அருண்குமாரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மருத்துவமனையில் புஷ்பலதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பலாத்காரம், கொலை உள்ளிட்ட பிரிவுகளில் அருண்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவனை கைது செய்தனர்.
12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications