தமிழகத்தில் இடி மழைக்கு வாய்ப்பு.. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கூடவே அனல் காற்றும் வீசுவதால் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 35 முதல் 55 கிமீ வரை காற்று வீசக்கூடும் என்றும் கடல் அலைகள் 3.5 முதல் 4.6மீ வரை எழும்பும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
இதனால், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு












Click it and Unblock the Notifications