நீட் தேர்வுக்கு இணையான கட்டுப்பாடு.. ரசிகர்களை சோதிக்கும் பாதுகாப்பு நடவடிக்கை.. இன்று என்ன நடக்கும்
சென்னை மைதானத்தில் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியை பார்ப்பதற்கு எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது அதிக அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: சென்னை மைதானத்தில் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியை பார்ப்பதற்கு எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது அதிக அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்களுக்கு இணையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது. சென்னை அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையில் இந்த போட்டி நடக்கிறது.
இந்த போட்டிக்கு எதிராக காவிரிக்காக போராடி வரும் மக்கள் குரல் கொடுத்துள்ளனர். இதனால் அசம்பாவிதம் நடப்பதை தடுக்கும் விதத்தில் ரசிகர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடு
இந்த போட்டியை காண வரும் மக்கள் கருப்பு உடை அணிய கூடாது, செல்போன் எடுத்து செல்ல கூடாது, வாட்டர் கேன் கொண்டு செல்ல கூடாது, பெயிண்ட், பிளக்ஸ் பேனர் கொண்டு செல்ல கூடாது என்று அடுக்கடுக்காக கட்டுப்பாடுகள் விதித்து இருக்கிறார்கள். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் இப்படி
எந்த வகையிலும் உள்ளே போராட்டம் உருவாக கூடாது என்று அரசு நினைக்கிறது. இந்த போராட்டத்தை எப்படியாவது முடக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இப்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் மூலம் புகைப்படம் எடுப்பது, பேஸ்புக்கில் தகவல் தெரிவித்து போட்டோ எடுப்பது என நிறைய விஷயங்கள் செய்ய முடியும் , அதை தடுக்கவே இப்படி விதிகள் விதிக்கப்பட்டுள்ளது.

மோசம்
நீட் தேர்வின் போதும் இப்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அப்போது முழு கை சட்டை அணிந்து வந்தவர்களின் சட்டைகள் கிழிக்கப்பட்டது. பெண்களின் உள்ளாடைகள் கூட சோதனை செய்யப்பட்டது. அதன்பின் முடிகளில் எதுவும் வைத்து இருக்கிறார்களா என்று கூட சோதனை செய்தார்கள். அதேபோல் இப்போது விதிகள் விதிக்கப்பட்டுள்ளது.

என்ன நடக்கும்
இன்று போட்டிக்கு தவறி கருப்பு உடை அணிந்து சென்றால் கூட அனுமதிக்கப்பட மாட்டார்கள். குழந்தைகள் கூட கருப்பு உடை அணிந்து செல்ல கூடாது. நீட் தேர்வு போலவே ஆடையை மாற்றிவிட்டு வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிப்பார்கள். அதே போல் செல்போன் எடுத்து சென்றால் வெளியே யாரிடமாவது கொடுத்துவிட்டு செல்ல வேண்டும், காலணிகளை கூட சோதனை செய்து அனுப்ப இருப்பதாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications