திடீரென இடையில் வந்த அண்ணன்.. நீ என்ன என்னை கேட்பது.. திட்டிய தங்கை.. சீர்காழியில் நடந்த பயங்கரம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கை போலீசார் விசாரித்த போது திடீர் திருப்பமாக, தொடர்ந்து செல்போனில் மற்றவரிடம் பேசியதால் அவருடைய அண்ணனே (பெரியப்பா மகன்) கழுத்தை நெரித்து கொலை செய்தை கண்டுபிடித்து கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பெருந்தோட்டம் பீச் தெருவில் வசிப்பவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதேபோல் கலைஅழகி என்ற மகளும் இருந்தார்.

சென்னையில் வேலை
இந்நிலையில் தமிழ்ச்செல்வியின் கணவர் பாலகிருஷ்ணன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். கலைஅழகி (26). பிசிஏ படித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

அம்மா இல்லை
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து பெருந்தோட்டத்திற்கு வந்திருக்கிறார் கலை அழகி. கடந்த 25 ஆம் தேதி காலை கலைஅழகியின் தாய் தமிழ்ச்செல்வி, வைத்தீஸ்வரன் கோவிலில் நடந்த உறவினரின் வீட்டு கல்யாணத்திற்கு சென்று விட்டார்.

கொலை
அப்போது வீட்டில் கலைஅழகி மட்டும் தனியாக இருந்திருக்கிறார். உறவினர் வீட்டு திருமணம் முடிந்த பின்னர் தனது வீட்டுக்கு தமிழ்ச்செல்வி வந்திருக்கிறார். அங்கு பார்த்த போது தனது மகள் கலைஅழகி கழுத்து நெறித்துக் கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நேரில் வந்த போலீஸ்
கதறி துடித்தபடி, தனது மகள் கொல்லப்பட்ட விவகாரத்தை திருவெண்காடு காவல் போலீசுக்கு தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாணை நடத்தியதுடன், கலை அழகியின் உடலை கைப்பற்றினர். அத்துடன் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.

போனில் பேசினார்
அதை தொடர்ந்து கொலைக்கான காரணம் என்ன, அப்போது அங்கிருந்தது யார் யார், போலீசார் விசாரணை நடத்திய போது,சம்பவத்தன்று கலைஅழகி செல்போனில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததை அவரது பெரியப்பா மகன் ரகு (30) என்பவர் பார்த்துவிட்டார். யாருடன் தொடர்ந்து போன் பேசிவருகிறாய் என கேட்டு அடித்துள்ளார். இதற்கு கலைஅழகி.. நீ என்ன கேட்பது.. உன் வேலையை பார் எனக்கூறி திருப்பி தாக்கினாராம்.

சிறையில் அடைப்பு
.இதனால் ஆத்திரமடைந்த ரகு, கலை அழகியை அடித்து உதைத்து வீட்டில் கிடந்த செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை நெறுக்கி கலை அழகியை கொலை செய்தாராம். இதையடுத்து ரகு மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications