மலை மலையா மோசம் செஞ்ச மூதேவிங்க.. அதிர வைக்கும் சிம்பு கீதம்..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு லண்டனில் தலைமறைவாக உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவையும் ஜிஎஸ்டி வரி குறித்தும் நடிகர் சிம்பு கடுமையாக விமர்சித்துள்ளார் தனது தட்றோம் தூக்றோம் பாடலில்.

நடிகர் சிம்பு நடிக்கும் தட்றோம் தூக்றோம் படம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. அதில் பணமதிப்பிழப்பினால் மக்கள் சந்தித்த இன்னல்கள் குறித்து கபிலன் வைரமுத்து எழுதிய பாடலை நடிகர் சிம்பு தனது சொந்த குரலில் பாடியுள்ளார்.

Simbu slams GST and Vijay Mallya

இந்த பாடலில் மலை மலையா மோசம் செஞ்ச மூதேவிங்க; ஃபாரீ...னுதான் போயாச்சு என்று விஜய் மல்லையாவை வெளுத்து வாங்கியுள்ளனர். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.9000 கோடி கடனை பெற்றார் கிங்பிஷர் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா.

இவர் கடனை செலுத்தாமல் லண்டனுக்கு சென்று அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவரை நாடு கடத்த இந்திய அரசு, பிரிட்டன் அரசிடம் கெஞ்சி கொண்டுள்ளது. லண்டனில் ஸ்காட்லேண்ட் யார்டு போலீஸாரால் இருமுறை கைது செய்யப்பட்ட மல்லையாவுக்கு நீதிமன்றம் ஜாமீனும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Simbu slams GST and Vijay Mallya

இதேபோல் பணமிதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டு வங்கி வாசல்களில் நின்றதெல்லாம் முடிஞ்சி போச்சு என்று நினைத்த போது ஜிஎஸ்டி வந்தாச்சு என்றும் சிம்பு பாடியுள்ளார். மெர்சல் படத்தில் ஜிஎஸ்டிக்கு எதிராக விஜய் பேசிய வசனத்தை நீக்குமாறு தமிழக பாஜக பிரமுகர்கள் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Simbu criticised Vijay Mallya and GST in his Demonetisation anthem which was sung for Thatrom Thoorom upcoming movie.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற