சிவாஜி மணிமண்டபம்: குடும்பத்துடன் ஜெயலலிதாவைச் சந்தித்து நன்றி தெரிவித்த பிரபு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில நாட்களுக்கும் முன்னர் சட்டசபையில் மறைந்த முன்னாள் நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஜெயலலிதா.

மணிமண்டபம் கட்டும் இடம் மற்றும் செலவு அனைத்தையும் அரசே ஏற்கும் என்று 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

இதற்காக நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தங்கள் நன்றிகளை முதல்வர் ஜெயலலிதாவிற்கு தெரிவித்து இருந்தனர்.

Sivaji Family Meets Chief Minister Jeyalalitha Thanks For Memorial Announcement

இந்நிலையில் இன்று காலை நடிகர் பிரபு தனது குடும்ப உறுப்பினர்களுடன் தலைமைச்செயலகம் சென்று தனது நன்றியை முதல்வர் ஜெயலலிதாவிற்கு தெரிவித்து இருக்கிறார்.

முதல்வர் ஜெயலலிதாவை அண்ணன் ராம்குமார் மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சென்று சந்தித்துப் பேசிய பிரபு தலைமைச் செயலகத்தில் இருந்து மன மகிழ்ச்சியுடன் வெளியே வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

பிரபுவின் மகனும் நடிகருமான விக்ரம் பிரபு படப்பிடிப்பு தொடர்பாக வெளியூரில் இருந்ததால் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லையாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+