நெடுவாசல் போராட்டம் கைவிடப்படுமா? இன்று இறுதி முடிவு... போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பேட்டி
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை தொடர்வதா? இல்லையா என்பது குறித்து இன்று இறுதி முடிவு செய்யப்படும் என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் வேலு தெரிவித்தார்.
புதுக்கோட்டை: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நீடிக்கும் என்று சில இளைஞர்கள் தெரிவித்து நிலையில், போராட்டத்தை தொடர்வதா? இல்லையா என்பது குறித்து இன்று இறுதி முடிவு செய்யப்படும் என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் வேலு தெரிவித்தார்.
ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மக்கள் 15வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மட்டுமின்றி தஞ்சை உள்ளிட்ட பல இடங்களிலும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுவது, மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நேற்று கடைகளை அடைத்து வர்த்தக சங்கத்தினர் ஆதரவை தெரிவித்தனர். தொடர்ந்து பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து 15வது நாளாக போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சென்னை வந்து போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தை கைவிடுமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை முதல் போராட்டத்தை தொடர்வதா, இல்லை விடுவதா என்று ஆலோசனை நடத்தி வந்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் கணேஷ், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் கிராம மக்களுடன் பேரவூரணியில் ஆலோசனை நடத்தினர்.
இந்ந நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கோட்டைக்காட்டில் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இதே போல் நெடுவாசலிலும் போராட்டம் தொடரும் என்று இளைஞர்கள் திடீரென்று அறிவித்தனர். பேராவூரணியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் இளைஞர்கள் திடீர் என்று அறிவித்தது குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் நெடுவாசல் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் வேலு பேராவூரணியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரை இன்று காலை சந்தித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்க உள்ளோம்.
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடைத்தால் போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து இறுதி முடிவு செய்யப்படும். போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க கூடிய சூழ்நிலை ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் போராட்டத்தைக் கைவிடுவதா, தற்காலிகமாக ஒத்திவைப்பதா? அல்லது தொடருவதா என்று கிராம மக்கள் அறிவிப்பதே இறுதியான அறிவிப்பு என்று கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications