கள்ளக்காதலி கொலை... செங்கல் சூளையில் புதைத்த பெற்றோர்... 3 மாதத்திற்குப் பின் வெளியான உண்மை
மகனுடன் சேர்ந்து வாழ்ந்த கள்ளக்காதலியை பெற்றோரே கொன்று புதைத்து செங்கல்சூளையில் புதைத்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே மகனுடன் குடும்பம் நடத்திய கள்ளக்காதலியை பெற்றோரே கழுத்தை நெறித்த கொன்று செங்கல் சூளையில் புதைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் வில்லிபாளையத்தைச் சேர்ந்த சவுந்தர்யாக என்பவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுப்பாட்டால் கணவரை பிரிந்த அவருக்கு பரமத்தியைச் சேர்ந்த சூர்யா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்தப் பழக்கம் கள்ளக்காதலாக மாறியதால் இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தினர்.

இது சூர்யாவின் பெற்றோரான மானோகரனுக்கும் சுமதிகுக்கும் பிடிக்கவில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த அவர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சவுந்தர்யாவை அவரது தாய் வீட்டில் விட்டுவருவதாக கூறி அவர்களுக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் சவுந்தர்யாவைக் காண அவரது தாய் வீட்டுக்கு சூர்யா சென்றுள்ளார். அப்போது அங்கு சவுந்தர்யா இல்லாததைக் கண்டு அவரது தாயிடம் கேட்டுள்ளார். அதற்கு சவுந்தர்யா இங்கு வரவேயில்லை என கூறியுள்ளார். என் பெற்றோர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழைத்து வந்ததாக சூர்யா கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சவுந்தர்யாவின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து விசாரணையை முடுக்கி விட்ட போலீசார் சூர்யாவின் பெற்றோரை பிடித்து விசாரித்தனர். அப்போது சவுந்தர்யா எங்கள் மகனுடன் வைத்துள்ள தகாத உறவை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரை செங்கல் சூளைக்கு அழைத்து சென்று சேலையால் கழுத்தை நெரித்து கொன்று அங்கேயே புதைத்து விட்டதாக கூறினர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் புதைத்த இடத்தை அடையாளம் காட்டுமாறு கூறினர்.
சவுந்தர்யாவின் உடல் மாவட்ட எஸ்பி மற்றும் தாசில்தார் முன்னிலையில் தோண்டியெடுக்கப்பட்டு பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மகனின் கள்ளக்காதலியை பெற்றோரே கொன்று செங்கல் சூளைய்ல புதைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications