நெல்லை-சென்னை இடையே பகல் நேர சிறப்பு ரயில்: இன்று முன்பதிவு துவக்கம்
நெல்லை: கூட்ட நேரிசலை சமாளிப்பதற்காக நெல்லை-சென்னை இடையே பகல் நேர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துளளது. இதற்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் நாராயணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

நெல்லை-சென்னை இடையே (வண்டி எண் 06024) அதிவிரைவு ரயில் பிப்ரவரி 13, 20, 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நெல்லையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு சென்னை சென்டரல் ரயில் நிலையத்தை அடையும். அது போல் மறுமார்க்கத்தில் பிப்ரவரி 16, 23 மற்றும் மார்ச் 2 ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் ரயில்(எண் 06025) அன்று இரவு 11.30 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் வரும். இந்த ரயிலில் 17 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதியுள்ள பெட்டிகளும், 4 பொது பெட்டிகளிலும் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், பெரம்பூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடி, அரக்கோணம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் கூடுதலாக நி்ற்கும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று துவங்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications