ஜெயலலிதா உடல் நலம் பெற ஸ்ரீவைகுண்டத்தில் விஷ்ணுசகஸ்ர நாம யாகம்
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான்சுவாமி கோவிலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி விஷ்ணுசகஸ்ரநாம புஷ்ப யாகம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடந்தது.
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நவதிருப்பதியின் அனைத்துக் கோவில்களிலும் ஒரே நேரத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
நவதிருப்பதிகளில் முதல் ஸ்தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான்சுவாமி கோவிலில் கள்ளபிரான் சுவாமி வைகுண்டநாயகி, சோரநாதநாயகி தாயார்களுடன் எழுந்தருள அங்கு ரோஜா, செவ்வரளி, மல்லிகை, தாமரை, பிச்சி, துளசி, வாடாமல்லி உள்ளிட்ட பலவகையான மலர்கள் கொண்டு 1008 நாமாவளியுடன் கூடிய விஷ்ணுசகஸ்ர நாம அர்ச்சனை மற்றும் புஷ்பயாகம் நடைபெற்றது. சிறப்பு யாக வழிபாடுகளை வாசுபட்டர், ரமேஷ்பட்டர், ராமானுஜம், சீனிவாசன் குழுவினர் செய்தனர். இந்த யாக வழிபாட்டில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், மகளிரணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னதாக, ஸ்ரீவைகுண்டம் பாலவிநாயகர் கோவில் முன்பிருந்து அதிமுகவினர், முன்னாள் அமைச்சரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நதிக்கரை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பால்குடம் எடுத்தனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, அவர் விடுதலை பெறவேண்டும் என்று ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான்சுவாமி கோவிலில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் தலைமையில் இதுபோன்றதொரு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அதற்கு மறுநாளே அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை ஆனார். இதுபோன்று, இந்த முறையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்றிடுவார் என்று கருதி இந்த சிறப்பு யாகம் நடத்தப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications